Gem Veeramani: அடுக்கடுக்கான போக்சோ குற்றச்சாட்டுகளால் ஜெம் வீரமணி, குண்டர்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குண்டர் சட்டத்தில் ஜெம் வீரமணி

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அதன் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் அடுத்தடுத்து பல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது புகார்கள் குவிந்தன. இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக சாந்தி உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வீரமணி மீது ஏழு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குண்டர்சட்ட நடவடிக்கையும் பாய்ந்துள்ளது. இந்நிலையில் தான், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் வீரமணியை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

”சதி வலையில் விழுந்து கோடிகளை இழந்தேன்”

வாக்குமூலம் தொடர்பான தகவலின்படி, தனக்கு இப்படி ஒரு மோசமான சபல ஆசைகள் இருப்பதை அறிந்த சாந்தி, அதனை பணம் பறிப்பதற்கான வாய்ப்பாக மாற்றிக்கொண்டதாக வீரமணி குமுறியுள்ளார். மேலும், “சிறுமிகளுடன் தனியாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்து அதை காட்டி மிரட்டி என்னிடம் இருந்து பணத்தை பறித்தனர். இதற்கு அவரது கணவர் மகேந்திர சிம்மனும் உடந்தையாக இருந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பல கோடி மதிப்பிலான நிலங்களை விற்று பணத்தை கொடுக்க சொல்லி மிரட்டியபோது நான் முடியாது என மறுத்துவிட்டேன். இதனால் ஆத்திரமடைந்து என்னை பற்றிய தகவல்களை கசியவிட தொடங்கினார். அதற்கு அஞ்சி பணம் தர சம்மதித்தபோது, ஒரு பெரும் தொகையை என்னிடம் கேட்டனர். அதன் காரணமாகவே ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த நிலத்தை குறைந்த விலைக்கு விற்க வேண்டியதாயிற்று.

அரசியல்வாதிகளும் மிரட்ட தொடங்கினர்..!

பணம் கொடுத்த பிறகும் சாந்தி மிரட்டியதோடு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நபர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் மிரட்ட தொடங்கினர். அவர்களுக்கும் சாந்தி பணம் வாங்கி கொடுக்க, இந்த விவகாரம் காவல்துறை வரை சென்றது. பிரச்னை பெரிதாகும் என்பதை உணர்ந்த பிறகு, இந்த விவகாரத்தை எனது மகளிடம் போட்டுடைத்தேன். அவர் தான் என்னை ரயில்வே தொழிர்சங்க நிர்வாகி கண்ணையாவின் மகன் பிரகாசிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகும் குற்றத்தை மூடி மறைக்க பிரகாஷ் வாயிலாக பல கோடிகளை கொடுத்து இழந்தேன்” என வீரமணி வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Anirudh Kavya: ஸ்டார் ஜோடியாகும் அனிருத் - காவ்யா..! SRH ஓனர் & ராக்ஸ்டாரின் சொத்து விவரங்கள் - கோடிகளின் விவரங்கள்

கிலோ கணக்கில் தங்கம்:

இதனிடையே, இடைத்தரகர்கள் வாயிலாக காவல்துறை அதிகாரிகளுக்கு 23 கிலோ தங்கம் தரப்பட்டது தொடர்பாக, வீரமணி வீட்டில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனடிப்படையில் எந்தெந்த அதிகாரிகளுக்கு தங்கம் வழங்கப்பட்டது என்பது குறித்து வீரமணியிடம் போலீசார் கேள்விகளை எழுப்பி வாக்குமூலம் பெற்று வருகின்றனராம். இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்புடைய வழக்கை மூடி மறைக்க முயன்றதாக, சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண், கூடுதல் ஆணையர் கண்ணன் மற்றும் யாஷ்மின் உள்ளிட்டோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article