இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!

இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே  போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
News Image

சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியா வைத்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்யலாமா என முதலமைச்சர் விஜயை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தில் தவெக நிர்வாகி

தவெகவில் நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வந்த திருப்பூண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் பூபாலன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது தமிழகத்தை உலுக்கியுள்ளது. உடனடியாக பூபாலன் கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும், இது தவெக அரசுக்கு கடும் அழுத்தத்தை உண்டாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்து முதலமைச்சர் விஜயையும், தவெக அரசையும் கடுமையாக சாடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சர்வதேச போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் கடத்தப்படுவதாக  வருவாய் புலனாய்வு இயக்குநரக திருச்சி மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நடந்த அதிரடி சோதனையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பூபாலன், சுகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லியோ தாஸ், பவுடர் சரத்களை கணக்கெடுங்கள்

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு பல கேள்விகளையும் எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Partyஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.

சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.

தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது."பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks