Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு

Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
News Image

தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. தீபாவளி பண்டிகையை தமிழ்நாடு மக்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை:

தீபாவளி பண்டிகை நடப்பாண்டில் வரும் நவம்பர் 8ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கலுக்கு பிறகு கொண்டாடப்படும் பெரும் பண்டிகையான தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அதற்கு அடுத்தநாளான திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுமா? என்று மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 9ம் தேதியான திங்கள் கிழமை பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கோலாகலமாக பொதுமக்களால் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. வெளியூர்களில் படித்து வரும் மாணவ, மாணவிகள், வசித்து வரும் இளைஞர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

மக்கள் எதிர்பார்ப்பு:

தீபாவளி பண்டிகைக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும், ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். சென்னை உள்பட பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வந்ததால் பொதுமக்கள் பலரும் ஏற்கனவே சற்று அதிருப்தியில் இருந்தனர். ஏனென்றால், ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே பொது விடுமுறை நாள் என்பதால் அதேநாளில் தீபாவளியும் வந்ததால் கூடுதல் விடுமுறை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் ஆவலுடன் இருந்தனர்.

மக்கள் மகிழ்ச்சி:

இந்த நிலையில், பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வரும் நவம்பர் 9ம் தேதியான திங்கள்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்காக அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே போனஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளிக்காக அரசு சார்பில் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விற்பனை ஜோர்:

மேலும், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் பட்டாசுகள் விற்பனை, புத்தாடைகள் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. மழை அவ்வப்போது அச்சுறுத்தி வந்தாலும் தீபாவளி விற்பனை படுஜோராக நடந்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks