Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?

Dharapuram By Election:  ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
News Image

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் முன்னால் தவெக வேட்பாளர் சத்யபாமா சமூக வலைத்தளங்களில் தன்னை ஆபாசமாக பேசுவதாக வருத்தப்பட்டு கண் கலங்கினார். ஆனால் இந்த நிகழ்வு திட்டமிட்ட நாடகம் என சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் பரப்புரை

வரும் அக்டோபர் 6ம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இதனிடையே திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய் நேற்று பரப்பரை மேற்கொண்டார். கோவை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக தாராபுரத்திற்கு வருகை தந்த அவருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பை பொதுமக்களும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் அளித்தனர்.

மேடையில் அழுத சத்யபாமா

இதனிடையே தாராபுரம் மாருதி நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜய் பேசுவதற்கு முன்னால் பேசிய வேட்பாளர் சத்யபாமா அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் ஏன் இணைந்தேன் என்பதற்கான காரணத்தை விளக்கினார். அதேசமயம் தான் ஒருபோதும் அதிமுகவுக்கு துரோகம் செய்யவில்லை என்றும், திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைக்க முடிவு செய்தது தனக்கு பிடிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ஆனால் என்னை சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு பெண் என்றும் கூட பாராமல் ஆபாசமாகவும் அவமரியாதையாகவும் விமர்சித்து வருகின்றனர் எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதார். உடனடியாக அருகில் நின்ற முதலமைச்சரின் விஜய் அவரை தேற்றினார்.

இணையத்தில் தீயை பரவிய வீடியோ

விஜய் முன்னிலையில் சத்யபாமா அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அதாவது சத்யபாமா அழுவதற்கு முன்னால் இந்த தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அமைச்சர் ராஜ் மோகன் போனில் பேசினார். அடுத்த சில நொடிகளில் சத்யபாமா பின்னால் என்று அவர் எதையோ சொன்னார். உடனடியாக சத்யபாமா கண்ணீர் விட்டு அழுவது போன்று அந்த வீடியோ காட்சிகள் இருந்தது. இது திட்டமிட்ட நாடகம் என எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் பரப்பி வரும் நிலையில் தவெகவினர் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.

உண்மையில் நடந்தது என்ன?

ஆனால் விஜய் பங்கேற்ற அந்த தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி முழுக்க முழுக்க நேரலை செய்யப்பட்டது. அமைச்சர் ராஜ் மோகன் போனில் பேசியதும், சத்யபாமா பின்னால் நின்று ஏதோ சொன்னதும் எல்லாம் உண்மைதான். அடுத்த சில நிமிடங்களில் சத்யபாமா ஒரு வார்த்தையை தெரிவித்தார். அதாவது தான் இரண்டு முக்கியமான விஷயங்களை பேசிவிட்டு முடித்துக் கொள்கிறேன் என கூறினார்.

ஏற்கனவே 3.30 மணிக்கு விஜய் பரப்புரை நடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மேடையில் வருவதற்கு மாலை 4 மணிக்கு மேலாகிவிட்டது. தொடர்ச்சியாக அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், சத்யபாமா ஆகியோர் அடுத்தடுத்து பேச விஜய் பேசுவது தாமதமாகி கொண்டே சென்றது. காலை முதல் தொண்டர்கள் பசி, சோர்வு மறந்து காத்து கிடக்கும் நிலையில் விரைந்து நிகழ்ச்சியை முடிக்கும் வகையில் சுருக்கமாக பேச ராஜ்மோகன் அறிவுறுத்தியதாக தமிழக வெற்றிக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே மீண்டும் சத்யபாமா சொன்னது போல் ஒரு பெண் என்றும் கூட பாராமல் இப்படி அவதூறு பரப்புகிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கெல்லாம் பதிலடி தேர்தல் வெற்றியில் தெரியும் எனவும் சூளூரைத்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks