CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?

CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
News Image

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் காரணமாக 109 தொகுதிகள் தவெக வசம் உள்ளது. தற்போது வரை தனிப்பெரும்பான்மை இல்லாமல் தடுமாறி வரும் தவெக அரசுக்கு காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது.

இடைத்தேர்தலில் பாமக மறைமுக ஆதரவு:

இந்த நிலையில், தவெக இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற மறைமுகமாக பாமக தனது ஆதரவை அளித்தது. விஜய் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் தவித்து வந்த நிலையில், அவர் 4 எம்எல்ஏ-க்களை தனது வசம் கொண்டுள்ள பாமக-வின் ஆதரவை எதிர்பார்ப்பார் என்று கருதப்பட்டது. ஆனால், அவர் திமுக கூட்டணி வசம் இருந்த கட்சிகள் பக்கமே சென்றார்.

தவெக ஆட்சியமைக்க உறுதுணையாக இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக அவ்வப்போது விஜய்க்கு பெரும் குடைச்சலை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த போதிலும் பாமக அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவை அளிக்கவில்லை. இது தவெக-விற்கான மறைமுக ஆதரவாக அமைந்தது. இதன் காரணமாகவும் மரகதம் குமரவேல் அபார வெற்றி பெற்றார்.

பாமக - விசிக ஒரே கூட்டணியிலா?

தவெக தலைமையிலான கூட்டணியில் பாமக-வையும் கொண்டு வர தவெக மூத்த தலைவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இதற்கு விசிக உடன்பட மறுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் வட தமிழகத்தில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதல்கள் உள்ளிட்ட கசப்பான சம்பவத்தால் இரு தரப்பினரும் ஒரே அணியில் இணைவது மிகவும் சவாலானதாக உள்ளது.

குறிப்பாக, பாமக கூட்டணிக்குள் வந்தால் விசிக வெளியேறும் என்று திருமாவளவனும், அமைச்சர் வன்னி அரசும் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர். வட தமிழகத்தில் வாக்கு வங்கியை அதிகரிக்கவும், பெரும்பான்மை சிக்கல் இல்லாமல் எஞ்சிய நாட்கள் ஆட்சியை நடத்தவும் பாமக-வை உள்ளே வர கொண்டு  அமைச்சர்கள் திருமாவளவனையும், விசிக-வையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

என்ன  முடிவு எடுப்பார் விஜய்?

அதேசமயம், சில அமைச்சர்கள் பாமக உள்ளே வருவதால் விசிக வெளியேறினாலும் பாமக ஆதரவை வைத்து சமாளிக்கலாம் என்று விஜய்யிடம் ஆலோசனை கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தற்போது வரை முதலமைச்சர் விஜய் எந்தவொரு முடிவும் எடுக்காமல் உள்ளார். விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக விஜய் முடிவு எடுக்க உள்ளார் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks