மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மத்திய இணை அமைச்சர், எம்பி பதவியில் இருந்தும் விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 பக்கம் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் பாரத மாதாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் சேவையாற்றியது தன் வாழ்வின் மிகப்பெரிய பெருமை என்றும், தினக்கூலித் தொழிலாளரின் மகனாகப் பிறந்து, பிரதமர் மோடி அமைச்சரவையில் பணியாற்றியது தன் வாழ்வின் ஆகச்சிறந்த பாக்யம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2029 மக்களவைத் தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த தொண்டர்களுடன் இணைந்து களப்பணியாற்ற விரும்புவதாகவும் கட்சியை வலுப்படுத்த முழு நேர பணியில் ஈடுபட ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாகவும் முதலில் நாடு, பிறகு கட்சி, கடைசியில்தான் தனது நலன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிராமம், கிரமமாக, தெரு, தெருவாக சுற்றி மக்களை சந்திக்க இருப்பதாவும் எல்.முருகன் கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமாலை சென்ற பிறகு, நயினார் நாகேந்திரன் அப்பதவிக்கு வந்தார். அண்ணாமலை இருந்தபோது, தமிழ்நாட்டில் பாஜக ஓரளவிற்கு தெரியும்படியாக இருந்த நிலையில், தற்போது அதுவும் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, எல்.முருகன் மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்புவதாக அறிவித்துள்ளார். இவரின் இந்த முடிவு, தமிழக பாஜக தலைமையில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

It has been the greatest honour of my life to serve Bharat Mata and Tamil Nadu under the leadership of Hon’ble Prime Minister Shri @narendramodi Ji. From the son of daily wage labourers to serving in the Union Council of Ministers under the leadership of Hon’ble PM Shri @narendramodi Ji has been the greatest privilege of my life. Now, I wish to return to the grassroots, stand with our karyakartas and dedicate myself full-time to strengthening the BJP in Tamil Nadu ahead of the 2029 Lok Sabha elections. Nation First. Party Next. Self Last. 🙏🇮🇳 @NitinNabin @blsanthosh

— Dr.L.Murugan (@DrLMurugan) October 13, 2026

Source: Read Full Article