தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதியில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது.

மதுராந்தகத்தில் இன்று விஜய் பரப்புரை:

தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் தவெக-விற்கு இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இதற்காக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் முதலமைச்சர் விஜய் ஏற்கனவே பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

டீக்கடையில் விஜய்:

இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் இன்று தனது சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காலையில் மகளிர் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி வைத்து நேரடியாக மதுராந்தகம் சென்றார். அங்கு தனது பரப்புரை வேனில் மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளுக்கும் சென்ற விஜய் ஒரு டீக்கடையில் இறங்கி அங்கே இருந்தவர்களுடன் சகஜமாக பேசி வாக்கு சேகரித்தார்.

விவசாயிகளின் பாதுகாவலன் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்...

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ராமாபுரத்தில் தானும் ஒரு விவசாயியாக டிராக்டர் ஓட்டி விவசாய நிலத்தில் உழவு செய்த மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்... pic.twitter.com/Pp7uFSlyMW

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) October 2, 2026

ட்ராக்டர் ஓட்டி வாக்கு சேகரிப்பு:

பின்னர், அங்கிருந்தவர்களுடன் இணைந்து டீ குடித்து விசில் சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர், வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளிடம் விசில் சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு வாக்கு சேகரித்தார். பின்னர், அங்கிருந்த ட்ராக்டரை வயலில் ஓட்டினார்.

மாற்றுத்திறனாளிகளின் மனதில் நம்பிக்கையை மகிழ்ச்சியுடன் விதைத்த மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்... pic.twitter.com/W9MzpcL3I0

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) October 2, 2026

ஆரத்தி எடுத்து அசத்தல்:

பின்னர், தனது பரப்புரையின்போது சாலையில் தன்னைப் பார்க்க வந்த மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களை நலம் விசாரித்தார். மேலும், இந்த சுற்றுப்பயணத்தின்போது பெண்கள் சிலர் அவருக்கு ஆரத்தி எடுக்க வந்தபோது அவர்களுக்கு இவர் ஆரத்தி எடுத்தார்.

எளியவர்களின் குரலாய் ஒலித்து வரும் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள், தாமும் ஓர் எளியவன்தான் என்பதை நிரூபித்த தருணம்...

மதுராந்தகம் தொகுதியில் விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் உள்ளிட்டோருடன் தேநீர் அருந்தி குறைகளைக் கேட்டறிந்தார். pic.twitter.com/wd1n8SotEp

— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) October 2, 2026

மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு உட்புறத்தில் அமைந்துள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று விஜய் இன்று தனது பரப்புரையில் ஈடுபட்டார். இந்த சுற்றுப்பயணத்தின்போது விஜய்க்கு வழி நெடுகிலும் மதுராந்தகம் தொகுதி மக்களும், தவெக ஆதரவாளர்களும் மலர்கள் தூவி வரவேற்றனர்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த மரகதம் வேட்பாளராக களமிறங்குகிறார்.

Source: Read Full Article