சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(03.10.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், அக்டோபர் 3-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாவரம்

ராதா நகர் மெயின் ரோடு, ராமசாமி தெரு, அனுமன் கோயில் தெரு, பாரதிபுரம், கக்கன் தெரு, சிதம்பரம் தெரு, சங்கர் தெரு, சுபாஷ் நகர், ஸ்ரீதேவி அம்மன் தெரு, விஸ்வேஸ்வரன் தெரு, வெங்கடேஸ்வரா நகர், குருசாமி நகர், எம்.ஜி.ஆர்.நகர், கருணாநிதி தெரு, பக்தவச்சலம் தெரு, சாந்தி நகர், காவேரி தெரு, நர்மதா தெரு, கலைமகள் தெரு, அண்ணா தெரு, கண்ணகி தெரு.

செம்பரம்பாக்கம்

பனிமலர் மருத்துவக் கல்லூரி, வரதராஜபுரம், யமுனா நகர், கொளப்பஞ்சேரி, சொக்கநல்லூர், பிடரேதங்கல்.

செம்பாக்கம்

மணவாள நகர், ஜெயேந்திர நகர், ஐயப்பா நகர், பிரசாந்த் காலனி, செந்தில் அவென்யூ, பாக்யம் நகர், நவநீதம் நகர், விஜிபி பொன் நகர்.

முடிச்சூர்

விஎம் கார்டன், ஜிஎம்ஆர் சுங்கச்சாவடி, சுந்தர் நகர், செல்வா நகர், ராயப்பா நகர்.

IT காரிடார்

ராஜு நகர், மேட்டுக்குப்பம், VOC தெரு, PTC குவார்ட்டர்ஸ், சக்தி கார்டன், CTS, பிள்ளையார் கோயில் தெரு, ஒக்கியம் பேட்டை, சந்திரசேகரன் அவென்யூ மற்றும் நகர், நேரு நகர், ராஜீவ் காந்தி சாலை, கண்ணகி நகர், TNSCB தோரைப்பாக்கம் IAS காலனி, OMR சாலை, ஈஸ்வரன் சாலை, ஓஎம் சாலை, காளியம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம் , ரிவர் வியூவ் காலனி.

பெசன்ட் நகர்

டிஎம்எம் தெரு, மகாலட்சுமி அவென்யூ, அண்ணா காலனி 1-வது பிரதான சாலை மற்றும் 31-வது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், கங்கை அம்மன் கோயில் தெரு, செல்ல பெருமாள் தெரு, ராஜு தெரு, நேதாஜி தெரு, லால் பகதூர் தெரு, எம்ஜி சாலை, காமராஜர் சாலை.

குன்றத்தூர்

மூன்றாம்கட்டளை, பாலாஜி நகர், வைஸ்ணவி அவென்யூ, விபிஆர் அவென்யூ, வச்சலா அவென்யூ, பூசானிகுளம், பஜார் ரோடு, ஒண்டி காலனி, சரவணா நகர், திருப்பதி நகர், செவன் ஹில்ஸ் நகர், ஆண்டாங்குப்பம் மெயின் ரோடு, கோதண்டம் தெரு, மானாச்சேரி.

வேளச்சேரி

வேளச்சேரி மெயின் ரோடு, எல்ஐசி காலனி, டான்சி நகர் 1 முதல் 7-வது தெருக்கள், தரமணி இணைப்பு சாலை, தண்டீஸ்வரம் 11 மற்றும் 12-வது தெருக்கள்.

சிந்தாதிரிப்பேட்டை

வெங்கடேச கிராமணி தெரு, சுவாமிநாயக்கன், சௌரிமுத்து தெரு, சிபிஎம் தெரு, வேலாயுதம் தெரு, முனியப்பிள்ளை தெரு, சத்து தெரு, சுவாமி தெரு, கொய்யாத்தோப்பு, வீரபத்ரா தெரு, மீர்மதனாலி தெரு, நாகாபமாஸ்திரி தெரு, வேலாயுதசெட்டி தெரு, சுப்புரையன் தெரு, ஹாரிஸ் தெரு, படவேட்டு அம்மன் தெற்குத் தெரு, படவேட்டு அம்மன் வடக்கு தெரு, முக்கியம்மன் கோவில் தெரு, கோவூர் வைத்தியநாதன் தெரு, உலகப்பா தெரு, அத்தியப்பா தெரு, அக்ரஹாரம் தெரு, தர்மராஜகோவில் தெரு, பள்ளி தெரு, குட்டி தெரு, வண்ணார் தெரு.

ஆவடி

கோவில்பதாகை, பூம்பொழில் நகர், கலைஞர் நகர், கன்னட பாளையம், செந்தில் நகர், சிவசக்தி நகர், ஸ்ரீ சக்தி நகர், வைஷ்ணவி நகர், ஜோதி நகர், அந்தோணி நகர், நாகம்மை நகர், ஜே.பி.நகர், அண்ணனூர், சோழம்பேடு, சி.டி.எச் சாலை, திருமுல்லைவாயல், சரஸ்வதி நகர், எம்டிஹெச் சாலை, குளக்கரை சிவன் கோவில், ஜாக் நகர், வெங்கடாசலம் நகர்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article