CM Vijay: ரைட், ரைட்..! டிக்கெட்டை கிழித்து, வெற்றிப் பயணத்தை தொடங்கி வைத்த CM விஜய் - மகளிர் செம்ம ஹாப்பி

CM Vijay: ரைட், ரைட்..! டிக்கெட்டை கிழித்து, வெற்றிப் பயணத்தை தொடங்கி வைத்த CM விஜய் - மகளிர் செம்ம ஹாப்பி
News Image

CM Vijay Vettri Payanam: தமிழ்நாடு அரசின் வெற்றிப் பயண திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 84 லட்சம் பேர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிப் பயண திட்டம் - தொடங்கிவைத்த CM விஜய்

சட்டமன்ற தேர்தலின் போது தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள், படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தங்கள் ஆட்சி அமைந்தால் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் அனைத்து வகையான பேருந்துகளுக்கும் விரிவாக்கப்படும் என விஜய் அறிவித்து இருந்தார். பெண்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்து இருக்காமல், சுயசார்பாக இருப்பதை அரசே ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டது.  இந்த திட்டம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்தார். அதன்படி, சென்னை கோயம்பேட்டில் மகளிருக்கான விரிவான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார்.

டிக்கெட்டை கிழித்து கொடுத்த முதலமைச்சர் விஜய்:

சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி செல்லும் பேருந்தில் ஏறி, அதில் பயணிக்கும் மகளிர் பயணிகளுக்கு முதலமைச்சர் விஜய் டிக்கெட்டுகளை கொடுத்து, தமிழ்நாடு அரசின் வெற்றிப் பயண திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அப்போது சில பெண்கள் விஜய்க்கு சாக்லெட் கொடுக்க, சிலர் கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர். அவை அனைத்தையும் வாங்கி முதலமைச்சர் தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டார். மூதாட்டி ஒருவர் திருஷ்டி சுத்திபோட, விஜயை கண்ட பேருந்தில் இருந்த சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் சிலர் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks