சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை(07.10.2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், அக்டோபர் 7-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்

கடப்பேரி MEPZ பகுதி, மௌலானா நகர், சிங்காரவேலன் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, ரங்கநாதபுரம், காதர் பாய் தெரு, கண்ணன் தெரு, ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, ரமேஷ் நகர், RV கார்டன், துரைசாமி பிள்ளை தெரு, எம்ஆர் தியேட்டர், முடிச்சூர் சர்வீஸ் சாலை, மார்க்கெட் பகுதி, மாநகராட்சி அலுவலகம், ஜட்ஜ் காலனி, காமகோடி நகர், ஸ்ரீராம் நகர், எம்எம்ஆர் தெரு, காந்தி சாலை மற்றும் வள்ளுவர் குருகுலம்.

பல்லாவரம்

பழைய பல்லாவரம், ஜமீன் பல்லாவரம், திரிசூலம், ராஜாஜி நகர், மல்லிகா நகர், மலகந்த புரம், பாரதி நகர், பச்சையப்பன் காலனி, கண்டோன்மென்ட் பல்லாவரம், ஜிஎஸ்டி சாலை, சுபம் நகர், முத்தமிழ் நகர், மூங்கில் ஏரி, பவானி நகர், பெருமாள் நகர், கிருஷ்ணா நகரின் ஒரு பகுதி, தர்கா சாலை, பல்லவா கார்டன், பிவி வைத்தியலிங்கம் சாலை, கிழக்கு பல்லாவரம், ஆஃபீசர்ஸ் லேன்.

ராஜகீழ்பாக்கம்

வேளச்சேரி மெயின் ரோடு, மேத்தா நகர் மெயின் ரோடு, மகாலட்சுமி நகர் மெயின் ரோடு, மாருதி நகர், கோமதி நகர், ஐயப்ப நகர், விவேகானந்தன் தெரு, ராசுகி தெரு, வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, திருமகள் நகர், கார்த்திக் அவென்யூ, பிரதீப் அவென்யூ, குருநாதர் தெரு, ரங்கா தெரு, விஓசி தெரு, நேதாஜி தெரு, பவநந்தியார் தெரு, மாரி அம்மன் கோவில் தெரு, சாம் அவென்யூ, செம்பாக்கம் மெயின் ரோடு, மகாசக்தி காலனி, ஐஓபி காலனி, கேம்ப் ரோடு, அம்பேத்கர் தெரு, ராஜீவ் காந்தி நகர், கலைஞர் கருணாநிதி நகர், துர்கா காலனி, வெங்கட்ரமணன் நகர், சிவகாமி நகர், முத்தமிழ் நகர், மணவாள நகர், ஏரிக்கரை தெரு.

போரூர்

ஐயப்பன்தாங்கல், ஆர்.ஆர். நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், வளசரவாக்கம் பகுதி, போரூர் கார்டன் ஃபேஸ் 1 மற்றும் 2, ராமசாமி நகர், அர்பன் ட்ரீ, ஆற்காடு சாலையின் ஒரு பகுதி, எம்.எம். எஸ்டேட், ஜி.கே.எஸ்டேட், சின்ன போரூர், வானகரத்தின் ஒரு பகுதி, பரணிபுதூர், காரம்பாக்கம், பொன்னி நகர், சமயபுரம், செட்டியார் அகரம், பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகர் மற்றும் தெள்ளியார் அகரம்.

நெற்குன்றம்

ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜீவ் காந்தி நகர், ஜானகிராம் காலனி, புவனேஸ்வரி நகர், ராமலிங்க நகர், தாமரை அவென்யூ மற்றும் கிருஷ்ணா நகர்.

திருவேற்காடு

பள்ளிக்குப்பம், சண்முகா நகர், கூட்டுறவு நகர் நான்காம் கட்டம், அன்னம்மாள் தெரு, சவீதா கல்லூரி, பிஎச் ரோடு, ஏசிஎஸ் கல்லூரி, நாராயணா பள்ளி.

பட்டாபிராம்

முழு பட்டாபிராம், சிடிஎச் சாலை, திருவள்ளுவர் நகர், கக்கன்ஜி நகர், சத்திரம், காமராஜபுரம், சோழன் நகர், ஐயப்பன் நகர், விஜிவி நகர், கண்ணபாளையம், தனலட்சுமி நகர், மற்றும் விஜிஎன்.

தகவல் தொழில்நுட்ப வழித்தடம்

நேரு நகர் 14-வது இணைப்பு மற்றும் 3-வது குறுக்குத் தெரு, கொட்டிவாக்கம், கேபிகே நகர், அன்னை சத்யா நகர் மற்றும் ரமணியம்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article