சென்னையில் அதிகரித்து வரும் பைக் ரேஸ்கள் மற்றும் சாகசங்களைத் தடுக்க சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கொஞ்ச நாள் அடங்கி இருந்த பைக் ரேஸ் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதாவது 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிக சத்தம் எழுப்பியபடி பைக் சாகசங்களில் ஈடுபட்டதும் மட்டுமல்லாமல் சீறிப்பாய்ந்தனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது.

பைக் ரேஸ் சாகசம்

இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பணி முடிந்து வீடு திரும்பியவர் பீதி அடைந்தனர். பல்வேறு இடங்களில் பைக் ரேஸ் நடந்த நிலையில் சென்னை ஐஐடி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து குகன் என்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் ஈடுபட்ட 16 கைது செய்யப்பட்ட நிலையில் 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இன்று அதிகாலை, சுமார் 15 முதல் 20 அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனங்களில் நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகே, பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், ஆபத்தான அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, சாகசத்தில் ஈடுபட்டனர். இருசக்கர முறையில் வாகனங்களை மேற்கண்ட சம்பவம் தொடர்பாக, போக்குவரத்து புலனாய்வு பிரிவு மற்றும் சட்டம் & ஒழுங்கு காவல் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, மேற்படி இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட 16 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சாகசத்திற்கு பயன்படுத்திய 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறைனரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர வாகனத் தணிக்கையின்போது, பதிவு எண் பலகைகள் இல்லாமல் (Without Number Plates) இயக்கப்பட்ட 56 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காவல்துறை எச்சரிக்கை

மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் சாகசம் என்ற பெயரில் வீலீங் செய்து, சாகசத்தில் ஈடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை பெருநகர காவல்துறையினரால் எச்சரிக்கை செய்யப்படுகிறது. சென்னை பெருநகர காவல்துறையினரால் தீவிர கண்காணிப்புடன் கூடிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் செயலி

இதனிடையே சாலையில் இரு சக்கர வாகனங்களை யாரேனும் ஆபத்தான முறையில் இயக்கினால் உடனடியாக பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறையை 100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதுதவிர Kaaval Udhavi மொபைல் செயலி மற்றும் 90031 30103 என்ற வாட்ஸ்அப் எண் வழியாகவும் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கலாம் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Source: Read Full Article