பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
News Image

நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை காலம் வரும் நிலையில் உள்ளூர் வியாபாரிகள்   வாழ்வாதாரம் பறிக்கப்படும் வகையில் தேவையற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பண்டிகை காலம் தொடக்கம்

இந்தியாவில் பண்டிகை காலமானது தொடங்கியுள்ளது. நவராத்திரி அக்டோபர் 11ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ஜனவரி மாதம் பொங்கல் வரை தொடர்ச்சியாக பண்டிகைகள் வந்த வண்ணம் இருக்கும். இந்த 4 மாத காலமானது வணிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் அளவுக்கு  வியாபாரம் இருக்கும். இப்படியான நிலையில் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் சூழலில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் வழக்கமாக தொழில் செய்து வரும் உள்ளூர் வியாபாரிகளிடம் அதிக கிடுக்குப்பிடி காட்டுவது வழக்கம்.

வியாபாரிகள் - போலீசார் இடையே மோதல்

உள்ளூர் வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் தேவையற்ற முறையில் அகற்றப்படுவது, ஆக்கிரமிக்கப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்வது, அபராதம் விதிக்கப்படுவது என பல சம்பவங்கள் நடக்கும். இதனால் வியாபாரிகள், காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்படும். இதுதொடர்பான புகார்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இதே பண்டிகை காலத்தில் பிரியங்க் கனூங்கோ தலைமையிலான தேசிய மனித உரிமைகள் ஆணைய அமர்வு  இந்த விவகாரத்தை கையிலெடுத்து விசாரணை நடத்தியது. அதனடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

இந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பண்டிகைக் காலங்களில் உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் வகையில் நடப்பாண்டு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி வியாபாரிகள் தேவையற்ற முறையில் வெளியேற்றப்படவோ அல்லது அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படவோ கூடாது என அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஓர் இடத்தை காலி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மாற்று விற்பனை இடங்கள் வழங்கப்பட வேண்டும். வியாபாரிகளின் பொருட்கள் தன்னிச்சையாகப் பறிமுதல் செய்யப்படவோ அல்லது அவர்கள் தேவையற்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படவோ கூடாது எனவும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும்

அதுமட்டுமல்லாமல் பாரம்பரியத் தொழில்கள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஊக்குவிக்க வலியுறுத்தியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த உத்தரவை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் தேவையற்ற முறையில் பாதிக்கப்படுவது இதன்மூலம் தடுக்கப்படும் என நம்பப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks