சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை

சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
News Image

பத்திர பதிவு நடைமுறை- புதிய மாற்றம்

சொந்தமாக வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்பது பலரின் கனவாகும், இந்த நிலையில் பத்திர பதிவு செய்யும் போது வெளிநாட்டில் வசிப்பவர்கள் பவர் ஆஃப் அட்டார்னி ஆவணம் தயாரிக்கும் போது அங்குள்ள இந்திய தூதரகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நோட்டரி பப்ளிக் முன்னிலையில் இந்த உயிர் வாழ் சான்றிதழைப் பெற்று சான்றொப்பம் (Attestation) பெற வேண்டும். இதற்கான கால அவகாசம் 30 நாட்கள் என்பதால் அந்த ஆவணத்தை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து 30 நாட்கள் என்பதை 60 நாட்களாக அதிகரித்து பதிவுத்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

30 நாட்களுக்குள் ஆவணம்

இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பதிவுத்துறைத்தலைவர் சுற்றறிக்கையின்படி 01.02.2013-க்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட பொது அதிகார ஆவணத்தின் அடிப்படையில் முகவரால் எழுதிக்கொடுக்கப்படும் ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும்போது பொது அதிகாரம் அளித்த நபர் உயிருடன் உள்ளார் என்பதற்கான "உயிருடன் உள்ளார்" என்ற சான்றும் தாக்கல் செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் தேதிக்கு முன் 30 நாட்களுக்குள் இச்சான்று வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அதற்கு முன்பாக அச்சான்று வழங்கப்பட்டிருந்தால் அச்சான்று செல்லத்தக்கதல்ல எனவும் பொது அதிகார ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டு அவ்வாவணத்தின் அடிப்படையில் 30 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களுக்கு இச்சான்று தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு சிக்கல்

இந்நிலையில், பொது அதிகாரம் உள்ள நபர் உயிருடன் உள்ளார் என்பதற்கான சான்று (Life Certificate) வெளிநாட்டிலிருந்து எழுதிக் கொடுக்கப்பட்ட பொது அதிகாரத்தை (Adjudicated Power of Attorney Document) பயன்படுத்தி பதிவுக்கு தாக்கல் செய்யும்போது உயிருடன் உள்ளார் என்பதற்கான சான்று பெறுவதற்கு வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகம் அல்லது அங்கு உள்ள நோட்ரி வழக்கறிஞர் ஆகிய அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் நேரம் ஒதுக்கீடு பெற்று அதன் பின் கையொப்பம் பெற்று அதனை வெளிநாட்டிலிருந்து தபால் (அல்லது) Courier மூலமாகவோ (அல்லது) தனி நபர் மூலமாகவோ முகவரிடம் வந்து சேர 30 நாட்கள் மேல் ஆகிவிடுகிறது என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வரபெற்றுள்ளன.

60 நாட்களாக உயர்த்தி அறிவிப்பு

இதற்காக வெளிநாட்டில் வசிப்பவர்கள் பவர் ஆஃப் அட்டார்னி ஆவணம் தயாரிக்கும் போது அங்குள்ள இந்திய தூதரகம் (Indian Embassy / Consulate) அல்லது அங்கீகரிக்கப்பட்ட நோட்டரி பப்ளிக் (Notary Public) முன்னிலையில் இந்த உயிர் வாழ் சான்றிதழைப் பெற்று சான்றொப்பம் (Attestation) பெற வேண்டும். இதற்கான கால அவகாசம் 30 நாட்கள் என்பதால் அந்த ஆவணத்தை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக பதிவுத்துறைக்கு புகார் வந்தது. அதன் பெயரில் தற்போது கால அவகாசத்தை 60 நாட்களாக உயர்த்தி வழங்கி பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவிட்டுள்ளார். மேலும் பொது அதிகார முதல்வர் உயிருடன் உள்ளார் என்பதற்கான சான்று (Life Certificate) எழுதிக் கொடுக்கப்பட்ட பொது அதிகாரத்தை பயன்படுத்தி பதிவுக்கு தாக்கல் செய்யபடும் மற்ற ஆவணங்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks