காற்றில் பறந்த சி.எம் விஜய்யின் உத்தரவு! சிறையில் இருந்து தொடரும் எஸ்கேப்... பொங்கி எழுந்த டிடிவி தினகரன்

காற்றில் பறந்த சி.எம் விஜய்யின் உத்தரவு! சிறையில் இருந்து தொடரும் எஸ்கேப்... பொங்கி எழுந்த டிடிவி தினகரன்
News Image

தவெக ஆட்சியில் சிறைக் கைதிகள் தப்பியோடுவது சர்வசாதாரணமாகி வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கோவை மத்திய சிறை வளாகத்திலிருந்து ஒரு விசாரணைக் கைதி, சென்னை கொளத்தூரில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் என முதலமைச்சர் சிறைத்துறைக்கு "கிடிக்குப்பிடி" உத்தரவு விடுத்த அடுத்த கணமே அடுத்தடுத்த கைதிகள் காவல் பாதுகாப்பிலிருந்து தப்பித்துள்ளனர்.

தவெக ஆட்சி அமைந்த நாள் முதலே சென்னை புழல், சேலம், தேனி என இதுவரை 50-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் தப்பியிருப்பதாக சொல்லப்படுவது, தவெக ஆட்சியில் சிறைத்துறை நிர்வாகம் சின்னாபின்னமாகியுள்ளதையே காட்டுகிறது.

குற்றவாளிகள் சிறைகளிலிருந்து தப்பிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், சிறைத்துறையில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது தெரியவந்த பிறகும், அவற்றைச் சரிசெய்வதற்கு எந்தவொரு முன்னெடுப்பையும் மேற்கொள்ளாமல் அலட்சியத்துடன் தவெக அரசு செயல்பட்டதே இச்சம்பவங்களுக்கான முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

சிறைக்காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறைத்துறை சீரமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் உத்தரவு வெளியிட்ட சில மணித்துளிகளிலேயே பாதுகாப்பு அரணிலிருந்த கைதிகள் தப்பியிருப்பது, முதலமைச்சரின் கீழ் இயங்கும் காவல்துறையையும், "வாய்ச்சவடால் வீராசாமி" எனப் பெயரெடுத்துள்ள சிறைத்துறை அமைச்சரையும் யாரும் ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது.

எனவே, சிறைத்துறையின் மேம்பாடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து, சம்பிரதாயத்திற்காகவும் "பரிகாரத்திற்காகவும்" சிறைச்சாலைகளை ஆய்வு செய்வதைத் தவிர்த்து, முறையாக ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து, அவை அனைத்தையும் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜயை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks