தமிழக மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் புதிய விதிகள்! யாரெல்லாம் இனி பயன்பெறலாம்?

தமிழக மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் புதிய விதிகள்! யாரெல்லாம் இனி பயன்பெறலாம்?
News Image

தமிழ்நாட்டில் அரசு சார்பாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த திட்டத்தில் பயனடைவதற்கான ஆண்டு வருமான வரம்பு மற்றும் காப்பீட்டு தொகை குறித்து முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் , பயன்பெற ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமான வரம்பு 1.20 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இந்த வருமான வரம்பினை தமிழக  அரசு உயர்த்தியுள்ளது. இதன்படி மேலும் பல ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ஆண்டு வருமான வரம்பு 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இன்னும் லட்சக்கணக்கான குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ காப்பீட்டை பெற முடியும். அதுமட்டுமில்லாமல் காப்பீட்டு தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த மருத்துவக் காப்பீட்டுத் தொகை குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி பயனாளிகள் 5 லட்சம் ரூபாய் வரை எந்தவித பணமும் செலுத்தாமல் மருத்துவ சிகிச்சை பெற்று கொள்ள முடியும்.

ஒருவேளை சிகிச்சை செலவுகள் 5 லட்சம் ரூபாய் என்ற வரம்பை தாண்டினால், ஒட்டுமொத்த காப்பீட்டு வரம்பான 25 லட்சம் ரூபாய் வரை ஆகும் இதர செலவுகள் அனைத்தும் இத்திட்டத்துக்கென உருவாக்கப்பட்டுள்ள தனி நிதியத்திலிருந்து வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் தெரிய வந்துள்ளது. தற்போதைய காப்பீட்டு ஒப்பந்தம் வரும் 2027 ஜனவரியுடன் நிறைவடைய உள்ளது. எனவே திருத்தப்பட்ட புதிய திட்டத்தை செயல்படுத்த பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் ஒன்றை தேர்வு செய்வதற்காக தமிழக அரசு தற்போது ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. அதில் தான் வருமான வரம்பு மற்றும் காப்பீட்டு தொகை உயர்வு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் தேர்வு செய்யப்பட உள்ள அந்த காப்பீட்டு நிறுவனம், தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு பாதுகாப்பை வழங்குவதோடு, அரசு அனுமதித்துள்ள மருத்துவமனைகள் மூலமாக தடையற்ற சிகிச்சைகள் கிடைப்பதையும் உறுதி செய்யும் பொறுப்பை ஏற்கும். எனவே அடுத்த ஆண்டு முதல் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பயனாளியாக சேர்வதற்கான ஆண்டு வருமான வரம்பு 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான புதிய குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்படுவதுடன், உயர் சிகிச்சைகளுக்கு 25 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு பாதுகாப்பு கிடைப்பது உறுதி செய்யப்படும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks