வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்ட சூழலில், இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் அடுத்ததாக எந்த தொடரில் விளையாடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒருநாள் போட்டிகளில் மட்டும் பங்கேற்பு

இந்தியாவின் முன்னாள் அணி தலைவர்களான விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை தொடருக்கு பின் டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர். டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் இருவரும் ஓய்வு பெற்றுவிட்டதால், ஒருநாள் தொடர்களில் மட்டுமே அவர்களை இந்திய ஜெர்சியில் தற்போது ரசிகர்களால் பார்க்க முடிகிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் அனைவருக்குமே இந்த ஒருநாள் தொடர் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. காரணம், சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி ஒரு சதமும், ரோகித் சர்மா ஒரு சதம் மற்றும் அரைசதமும் விளாசினர். குறிப்பாக, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆட்டம் 2027 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் அமைந்துள்ளது. இருவருமே ஒவ்வொரு ஒருநாள் தொடரிலும் ஒரு சதத்தை விளாசி தங்களின் ஃபார்மை நிரூபித்து கொண்டே இருக்கின்றனர்.

மீண்டும் எப்போது?

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் நிறைவடைந்துவிட்ட சூழலில், அடுத்ததாக எந்த தொடரில் இருவரையும் களத்தில் காண முடியும் என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். அதன்படி நம்பவர் 4ஆம் தேதி தொடங்க உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா இருவரும் மீண்டும் களமிறங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கு ஸ்ரேயஸ் ஐய்யர் ஐய்யர் தலைமை தாங்குவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி ஆட்டம்

2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருடன் இருவரும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு இடையில் அவர்கள் விளையாடும் ஒவ்வொரு தொடரும் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி வரும் இருவரும் ஒரே சமயத்தில் ஓய்வை அறிவிக்கவுள்ளது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், அதுவரை அவர்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் தவறாமல் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

Source: Read Full Article