ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்களா? புதிய அபராத விதியை தெரிந்துகொள்ளுங்கள்!..

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்களா? புதிய அபராத விதியை தெரிந்துகொள்ளுங்கள்!..
News Image

நாடு முழுதும், 13,000 பயணியர் ரயில்களில், தினமும் 2.50 கோடிக்கும் அதிகமானோர், பயணம் செய்கின்றனர். ரயிலில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போர் மீது, ரயில்வே சட்டம் 1989ன் படி, 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போது, இந்தத் தொகையை உயர்த்தி, ரயில்வே புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ரயில்களில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போரிடம், டிக்கெட் தொகையுடன், 250 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அபராதத் தொகையை, 500 ரூபாயாக, ரயில்வே உயர்த்தி உள்ளது. இதை ஜூலை 1 முதல் அமல்படுத்த வேண்டும் என, அனைத்து மண்டலங்களுக்கும், ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் 'ஜான் விஸ்வாஸ் சட்டம் 2026'-இன் கீழ், ரயில்வே சட்டம் 1989-ன் பிரிவுகள் 137 மற்றும் 138-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரயில்களில் உரிய டிக்கெட் இன்றி பயணிப்போருக்கு, பயணக் கட்டணத்துடன் கூடுதலாக குறைந்தபட்சம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட நபர் மீது நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வேறொருவரின் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பயணிப்பவர்களின் டிக்கெட் பறிமுதல் செய்யப்படுவதோடு, அவருக்கும் ரூ.500 குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்படும்.பெண்கள் பயணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகள் அல்லது இருக்கைகளில் அத்துமீறி பயணிக்கும் ஆண்களுக்கு ரூ.2,500 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் உடனடியாக ரயிலில் இருந்து இறக்கி விடப்படுவார்கள். ரயிலிலோ அல்லது ரயில் நிலைய வளாகத்திலோ மது அருந்திவிட்டு ரகளை செய்பவர்கள், சக பயணிகளுக்கு இடையூறு தருபவர்கள் மற்றும் ஆபாசமாக பேசுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

ரயில் பெட்டிகள் மற்றும் நிலையங்களில் அனுமதியின்றி வியாபாரம் செய்பவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் இதே குற்றத்தைச் செய்தால் 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடமுண்டு. ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பதைக் குறைக்கவும், ரயில்வேயின் வருவாய் இழப்பைத் தடுக்கவும் மற்றும் முறையான பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் இந்த கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, பயணிகள் அனைவரும் உரிய பயணச்சீட்டுடன், விதிமுறைகளைப் பின்பற்றி பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks