தமிழ் மொழியின் பெருமையை வளர்க்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் இயல், இசை, நாடக மன்றம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இந்த துறை செயல்பட்டு வருகிறது.

புஷ்பவனம் குப்புசாமி நியமனம்:

தவெக ஆட்சி அமைந்த பிறகு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

இவர் தமிழில் ஏராளமான பக்திப் பாடல்களையும், நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். இது மட்டுமின்றி ஏராளமான திரைப்பட பாடல்களையும் அவர் பாடியுள்ளார். தமிழில் இவர் காதல் கவிதை படத்தில் இடம்பெற்ற ஆளான நாள் முதலா, எதிரும் புதிரும் படத்தில் இடம்பெற்ற தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா, காத்து பசபசங்க, அழகி படத்தில் இடம்பெற்ற குருவி கொடஞ்ச கொய்யாப்பழம், ஸ்டைல் படத்தில் இடம்பெற்ற பொட்டு எடுத்து வச்சுவிடவா, பேரழகன் படத்தில் இடம்பெற்ற காதலுக்கு பள்ளிக்கூடம், திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற அப்பன் பண்ண, மாயாவி படத்தில் இடம்பெற்ற காத்தாடி போல, வீரம் படத்தில் இடம்பெற்ற ஜிங் சிக்கா ஜிங் சிக்கா, இட்லி கடை படத்தில் இடம்பிடித்த எத்தனை சாமி உள்பட பல பிரபலமான பாடல்களை பாடியுள்ளார்.

தொட்டு, தொட்டு பேசும் சுல்தானா, இனி இயல், இசைக்கு நீ தானா! https://t.co/LRXU10pMDY | #iyal #isai #nadagam #leader #PushpavanamKuppusamy #TNNews #ABPnadu https://t.co/ZG5sgdhFdn

— ABP Nadu (@abpnadu) October 5, 2026

இளையராஜா முதல் வித்யாசாகர்:

இளையராஜா, வித்யாசாகர், பரணி, தேவி ஸ்ரீ பிரசாத், யுவன்ஷங்கர் ராஜா, இமான், பரத்வாஜ், ஜிவி பிரகாஷ், அனிருத் ஆகியோரது இசையில் பாடல்களை பாடியுள்ளார். சொல்ல மறந்த கதை, வேல்முருகன் போர்வெல்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கிராமத்துப் பாடல்கள் பற்றி ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இசையில் எம்ஏ, எம்பில் பட்டம் பெற்றதுடன் முனைவர் பட்டமும் பெற்ற இவரது மனைவி அனிதா குப்புசாமியும் பிரபலமான கிராமிய பாடகி ஆவார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் 3 ஆயிரம் நிகழ்ச்சிகள் வரை பங்கேற்றுள்ளனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் நடுவராக பங்கேற்றுள்ளார்.

கிராமப்புற பின்னணி:

இவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் அமைந்துள்ள கடலோர கிராமம் புஷ்பவனம். இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்து கிராமிய இசைக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்த இவருக்கு தற்போது தவெக ஆட்சியில் இயல், இசை, நாடக மன்றத்துறையின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article