இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு.. அமைச்சரவையை மாற்றி அமைக்க ரெடியாகும் விஜய்? யார் பதவி போகப்போதோ?

இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு.. அமைச்சரவையை மாற்றி அமைக்க ரெடியாகும் விஜய்? யார் பதவி போகப்போதோ?
News Image

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் மட்டும் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் விஜய்க்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மிக மிக அவசியமானதாக மாறியுள்ளது.

அமைச்சர்கள் செயல்பாட்டில் அதிருப்தி:

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் முடிவுகள் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களாக நடந்து வரும் தவெக ஆட்சியில் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் மீது முதலமைச்சர் விஜய்க்கு அதிருப்தி இருப்பதாகவும், இதனால் பல அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் பல நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.

இடைத்தேர்தலுக்கு பிறகு:

சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலின் முடிவுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள சரத்குமார், கீர்த்தனா, பர்வேஸ் உள்ளிட்ட சில அமைச்சர்கள் செயல்பாட்டில் விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், அவர்களது அமைச்சரவை பதவி பறிக்கப்படும் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும், கட்சிக்கு புதியதாக வந்த மாற்றுக்கட்சியின் முக்கிய நபர்கள் அனைவரும் அமைச்சரவையில் இருக்கும் நிலையில் ரசிகர் மன்ற காலம் முதல் இருந்து வந்த பலருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அவர்கள் அமைச்சரவையில் இடம் கோரி தொடர்ந்து பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

போட்டா போட்டி:

இந்த நிலையில், அமைச்சரவையில் இருந்து யார்? யாரை நீக்கலாம்? புதிய அமைச்சரவை பட்டியலில் யார்? யாரை சேர்க்கலாம்? என்ற பணிகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், இடைத்தேர்தல் பணிகளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களிடம் முதலமைச்சர் விஜய் ஒதுக்கியிருந்தார். அவர்களின் செயல்பாடுகள் பற்றியும் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்து வருகிறார்.

அமைச்சரவை மாற்றப்பட்டால் புதியதாக புதிய அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று சிலர் ஆர்வத்துடன் கட்சித் தலைமையை அணுகி வருகின்றனர். இதுமட்டுமின்றி, கூட்டணி கட்சியிலும் காங்கிரஸின் விஸ்வநாதன் மீது சரமாரி குற்றச்சாட்டுகள் வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கூட்டணி கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டு வேறு சிலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks