செவிலியர்கள் கைது.. மனோ தங்கராஜால் திசை மாறிய போராட்டம்.. காவல்துறையினர் சரமாரி கேள்வி!

செவிலியர்கள் கைது.. மனோ தங்கராஜால் திசை மாறிய போராட்டம்.. காவல்துறையினர் சரமாரி கேள்வி!
News Image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் இரவில் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம்

தமிழ்நாட்டில் இடைநிலை சுகாதார பணியாளர்கள் பொறுப்பில் இருக்கும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று காலை முதல் போராட்டம் நடத்தி வந்தனர். தங்கள் கோரிக்கைகளை தமிழக வெற்றிக் கழக அரசு மதித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தின் போது திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் அங்கு வந்து செவிலியர்களுக்கு ஆதரவு அளித்தார்.

இதனிடையே மாலை 5 மணி தாண்டியும் போராட்டம் தொடர்ந்ததால் காவல்துறையினர் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இது தோல்வியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து கலைந்து செல்லாவிட்டால் செவிலியர்களை கைது செய்வோம் என காவல்துறையினர் எச்சரித்தனர். எனினும் இரவு எட்டு மணியை தாண்டியும் போராட்டம் தொடர்ந்ததால் வேறு வழியின்றி செவிலியர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்ய தொடங்கினர். இதனால் போலீசாருக்கும் செவிலியர் குழுவுக்கும் இடையே தள்ளு முள்ளும், வாக்குவாதமும் ஏற்பட்டது. நிலைமை மோசமானதால் காவல்துறையினர் கைது நடவடிக்கையை விட்டனர். இந்த சம்பவத்தால் சென்னை எழும்பூர் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது

மனோ தங்கராஜால் திசை மாறியதா போராட்டம்?

இந்த நிலையில் செவிலியர் குழுவுடன் காவல்துறை அதிகாரி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், “பேச்சுவார்த்தைக்கு நீங்கள் 7 பேர் வந்த நிலையில் உங்களுடன் எதற்கு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜை அழைத்து வருகிறீர்கள்?.. அவருக்கும் பேச்சுவார்த்தைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?.. நீங்கள் மாலை 5 மணிக்கு மேலேயும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறீர்கள். உங்களை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நீங்கள் அங்கிருப்பவர்களை இங்கே வர சொல்கிறீர்கள். அப்படியெல்லாம் புரோட்டாகால் பண்ண முடியாது. இப்போதும் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் தரப்பு தயாராக உள்ளது.

காலை முதல் உங்களை பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என அழைத்தும் அங்கு வர மாட்டோம். நீங்கள் இங்கு வர வேண்டும் என சொன்னீர்கள். கடைசியாக 6 மணிக்கு மேல் வருகிறோம் என கூறினீர்கள். செவிலியர்களின் பிரச்னையை நீங்கள் தான் பேச வேண்டும். உங்கள் கோரிக்கைகளை கேட்க தாராளமாக கேட்கலாம். உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தான் நாங்கள் வந்துள்ளோம். ஆனால் மனோ தங்கராஜ் இல்லாமல் வரமாட்டோம் என சொல்கிறீர்களே?.. உங்கள் பிரச்னையை நீங்கள் மட்டும் தான் எடுத்து சொல்ல முடியும். அப்படி செய்வது தவறானது. காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என அந்த காவல்துறை அதிகாரி பேசுகிறார். இதனால் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜால் இந்த போராட்டம் திசை மாறியிருப்பதாக இணையவாசிகள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks