திருமணமாகி எட்டே மாதங்கள்..! கணவனை போட்டு தள்ளி ஓடிய மனைவி - சிக்கியது எப்படி? முழு விவரம்

திருமணமாகி எட்டே மாதங்கள்..! கணவனை போட்டு தள்ளி ஓடிய மனைவி - சிக்கியது எப்படி? முழு விவரம்
News Image

Affair Crime Murder: நாக்பூரில் தகாத உறவு விவகாரத்தில் கணவனை கொன்று தலைமறைவாக இருந்த மனைவி, தானேவில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனை கொன்ற மனைவி:

நாக்பூரின் அஜ்னியைச் சேர்ந்த 27 வயதான ஆட்டோ ஓட்டுநரான கௌரவ் ரக்டேவை ஆகஸ்ட் 20 அன்று கொலை செய்தது தொடர்பாக, அவரது மனைவியான தீபாலி என்ற பாலி விஜய் சலுங்கே என்ற பெண் சனிக்கிழமையன்று தானேவில் கைது செய்யப்பட்டார். இந்த பகீர் சம்பவத்திற்கு தம்பதியினருக்கு இடையே இருந்த திருமணத்திற்குப் புறம்பான உறவே காரணம் என காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை நடப்பதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு தான் இந்த தம்பதியினருக்கு திருமணமாகியுள்ளது. இதுதொடர்பான தகவலின்படி, இந்தச் சம்பவத்திற்கு பு ரக்டேவும் சலுங்கேவும் கலப்புத் திருமணம் செய்துள்ளனர். ஆனால், அதன் பிறகு ரிஷிகேஷ் கோடே என்பவருடன் சலுங்கேயிற்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் ரக்டேயின் கவனத்திற்கு வர கணவன் மற்றும் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Renault Duster: 5 ஸ்டார் ரேட்டிங் காருக்கு ரூ.2 லட்சம் தள்ளுபடி..! ரெனால்டின் அதிரடி, அசத்தலான மிட்-சைஸ் SUV முழு விவரங்கள்

தனியாக வசித்து வந்த மனைவி..!

மோதலை தொடர்ந்து சலுங்கே பின்னர் தனது கணவரின் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழத் தொடங்கியுள்ளனர். ஆனாலும், இருவரும் அவ்வப்போது நேரில் சந்தித்தும், தொலைபேசி வாயிலாகவும் சண்டையிட்டுள்ளனர். இந்நிலையில் தான்  தம்பதியரின் தகராறு தொடர்பான சூழ்நிலைகள் இறுதியில் ரக்டேவை நாக்பூரில் தனது மனைவி மற்றும் கோடேவை நேருக்கு நேர் சந்திக்க வழிவகுத்துள்ளன. அந்த நேரத்தில் தான் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. உறவுமுறை மற்றும் கொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள்  குறித்து காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

சம்பவத்தன்று நடந்தது என்ன?

பாதிக்கப்பட்டவர் சம்பவம் நடந்த நாளன்று தனது மனைவியையும், அவருடன் உறவு வைத்திருப்பதாகக் கூறப்படும் நபரையும் சந்திக்கச் சென்றுள்ளார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி பிற்பகலில், சலுங்கே மற்றும் கோடே ஆகியோருடனான தகராறைத் தீர்ப்பதற்காக நரேந்திர நகருக்குச் செல்லவிருப்பதாக ரக்டே தனது தந்தையிடம் கூறியுள்ளார். அதன்படி ரக்டே அங்கு வந்தபோது கோடே தனது இரண்டு கூட்டாளிகளுடன் சுந்தர்பன் லேஅவுட்டில் மது அருந்தியபடி இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில் இருதரப்புக்கும் இடையே அங்கு ஒரு மோதல் வெடித்தது. தாக்குதலில் படுகாயமடைந்த ரக்டே, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அவரது மனைவி தலைமறைவாகியுள்ளார்.

காவல்துறையில் புகார்..!

பாதிக்கப்பட்டவரின் தந்தை காவல்துறையிடம், சலுங்கேயின் தூண்டுதலின் பேரில், நரேந்திர நகரில் உள்ள ஒரு வடிகால் பாலம் அருகே கோடே மற்றும் அவரது கூட்டாளிகள் ரக்டேவை கத்தியால் தாக்கியதாக புகாராளித்தார். அதன்படி, தலைமறைவாகி இருந்த சலுங்கேவை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.  இதையடுத்து தானே குற்றப்பிரிவின் மிரட்டிப் பணம் பறித்தல் தடுப்புப் பிரிவு போலீசார், கடந்த சனிக்கிழமை அன்று அந்த பெண்ணை கைது செய்தனர். தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் நாக்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.  இந்த வழக்கு, ரக்டேவுக்கும் கோடே சம்பந்தப்பட்ட குழுவினருக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் மோதலை மையமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்தத் தாக்குதலுக்கு முன்னரான சூழ்நிலைகளையும், இதில் சலுங்கே ஆற்றியதாகக் கூறப்படும் பங்கையும் புலனாய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks