தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வந்தன. இதனிடையே அர்னாப் புயல் உருவானதை அடுத்து தமிழகத்தில் பெரிய பாதிப்பு இருக்குமோ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆந்திராவில் 140 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசி தும்சம் செய்தது மட்டுமல்லாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆனால் தமிழகத்தில் இந்த புயலால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

முரசு புயல்

இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டி வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இது புயலாக மாறும் பட்சத்தில் இதற்கு இந்தியா சார்பில் முரசு என பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த புயல் தமிழகத்தை பாதிக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

தமிழகத்துக்கு பாதிப்பா?

அதில், முரசு புயல் உருவாகும் சூழல் நிலவுகிறது. இது புயலாக வலுப்பெறும் பட்சத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆந்திரப் பிரதேச கடலோர கடற்கரைப் பகுதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆந்திரக் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளதால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, பொன்னேரி – கும்மிடிப்பூண்டி – பழவேற்காடு பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். நவம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் வட தமிழகத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க: Guru - Ketu Conjunction: தீபாவளி திருநாளில் குரு-கேது சேர்க்கை.. கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தெற்கு மற்றும் மத்திய ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது; அதே சமயம் வட தமிழகத்தில், குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் (KTCC) மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.

வறண்ட வானிலை

இதனிடையே இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article