நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் 10.05.2026 முதல் 31.07.2026 வரை நீட்தேர்வுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1.800 நபர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 65 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன.
தமிழ்நாட்டில் நீட்தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

அதனடிப்படையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு இவ்வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து கவனமுடன் பரிசீலனை செய்து, நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டது. இந்த தேர்வு ரத்தால் சிலர் தற்கொலை செய்துக்கொண்டது நாட்டை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. நீட் தேர்வை சரிவர நடத்தாத காரணத்திற்காக அப்போதையை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, கரப்பான் பூச்சி கட்சி சார்பில் டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. ஜென்ஸிக்களின் எழுச்சியால் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் சென்னை உள்பட பல நகரங்களில் நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாக தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும் மாணவர்கள் உள்பட பலர் நீட் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றனர். இதற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. தவெக அரசாங்கம் அமைந்த சில நாட்களிலேயே இந்தப் போராட்டம் நடைபெற்றதால் விமர்சனங்களையும் சந்தித்தன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தவெக அரசுக்கு எதிராகவும் குரல் எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Source: Read Full Article