தமிழகத்தில் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சாம்பார், பிரியாணி, பொறியல், கூட்டு என அனைத்து வித சமையலுக்கு இன்றியமையாத ஒன்றாக வெங்காயம் உள்ளது. கடந்த சில மாதங்களாக 5 கிலோ ரூ.100 என்று விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயம் மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. அதாவது ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்

ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட்டாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. அதாவது, கடந்த ஆகஸ்டு மாதம் 7-ம் தேதி ஒரு கிலோ முதல் ரக வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வெங்காய விலை கிடுகிடுவென ஆகஸ்டு 23-ம் தேதி கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை

பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் நாசிக்கில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்து கடந்த செப்டம்பர் 3ம் தேதி முதல் நகர்ப்புற ரேஷன் கடைகளில் ஒரு ரேஷன் கடைகளில் ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாசிக் வெங்காயம் எவ்வளவு?

எனினும், வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கடந்த செப்டம்பர் 22-ம் தேதி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து கடந்த 20-ம் தேதி ஒரு கிலோ வெங்காயம் வெங்காயம் ரூ.46-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களில் வெங்காயம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து நேற்று கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஆந்திர வெங்காயம் சிறியது கிலோ ரூ.36 பெரியது கிலோ ரூ.42-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கர்நாடக வெங்காயம் சிறியது கிலோ ரூ.38-க்கும் பெரியது கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நாசிக் வெங்காயம் சிறியது கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article