இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. அதேசமயம், ஹாங்காங் சிக்ஸ் தொடரிலும் இந்திய அணி ஆடி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வி:

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணியுடன் இன்று மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ராகுல் திரிபாதி 7 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 24 ரன்களும், நடராஜன் 14 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 38 ரன்களும் எடுக்க இந்தியா 94 ரன்கள் எடுத்தது.

36 பந்துகளில் 95 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஐக்கிய அரபு அமீரக அணி களமிறங்கியது. ஐக்கிய அரபு அமீரக அணியை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று எண்ணிய இந்திய அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரர்களான காலித் ஷா - அன்ஷ் டான்டன் ஜோடி மிரட்டலாக ஆடியது.

போராட்டம் வீண்:

இருவரும் இணைந்து சிக்ஸர்களாக விளாசினர். நடராஜன் வீசிய பந்தை நாலாபுறமும் விளாசினர். ஷஷாங்க் சிங், நிதிஷ் ராணா என வீசிய ஓவர்களில் ரன் மழை பொழிந்தனர். கடைசியில் இந்திய அ்ணி 4.2 ஓவர்களில் விக்கெட்டே இழக்காமல் 97 ரன்கள் விளாசி அசத்தினர். காலித் ஷா 14 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 52 ரன்கள் விளாசினார். அன்ஷ் டான்டன் 12 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 39 ரன்கள் விளாசினார்.

இங்கிலாந்திடம் அரையிறுதி:

இந்த தொடரில் ஒவ்வொரு குழுவிற்கும் இடையே அரையிறுதி போட்டி இந்த தொடரில் நடைபெறும் நிலையில், அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதியது. ஐக்கிய அரபு அமீரக அணிக்கு இடையே அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்தியா இங்கிலாந்திற்கு எதிராக முதலில் பந்துவீசியது.

தொடக்க வீரராக களமிறங்கிய மார்டின் ஆண்டர்சன் சிக்ஸராக விளாசினார். மறுமுனையில் அதிரடியைத் தொடங்கிய கேப்டன் சிம்ப்சன் 3 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த பர்னார்ட் சிக்ஸராக விளாசினார். மார்ட்டின் ஆண்டர்சன் 13 பந்துகளில் 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 51 ரன்கள் விளாசி அசத்தினார். பர்னார்ட் 14 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 6 ஓவரில் 124 ரன்கள் எடுத்தது.

3 ரன்னில் தோல்வி:

6 ஓவரில் 125 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஷாங்க் சிங் 9 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க, நிதிஷ் ராணா 4 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க ராகுல் திவேதியா டக் அவுட்டானார். நெருக்கடியான சூழலில் களமிறங்கிய ராகுல் திரிபாதி 14 பந்துகளில் 2 பவுண்டரி 7 சிக்ஸருடன் 56 ரன்கள் எடுக்க, கேப்டன் குருணல் பாண்ட்யா 7 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுக்க இந்தியா 121 ரன்கள் எடுத்தது. இதனால், 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

ஒரே நாளில் நடந்த 2 போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Source: Read Full Article