BCCI-யின் நடவடிக்கையால் பாதிக்கப்படும் இந்திய பௌலர்கள்... நாளுக்கு நாள் இந்திய கிரிக்கெட் பிட்ச்களின் தரம் குறைந்து வருவதன் காரணம் என்ன?

BCCI-யின் நடவடிக்கையால் பாதிக்கப்படும் இந்திய பௌலர்கள்... நாளுக்கு நாள் இந்திய கிரிக்கெட் பிட்ச்களின் தரம் குறைந்து வருவதன் காரணம் என்ன?
News Image

பொதுவாக இந்திய கிரிக்கெட் பிட்ச்கள் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்து வந்த நிலையில் தற்போது அமைக்கப்படும் பிட்ச்கள் அனைத்தும் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக அமைவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

தரம் குறையும் இந்திய பிட்ச்கள்

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய பிட்ச்களின் தரம் நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் ஸ்பின்னர்களுக்கு பெரிதளவில் சாதகமாக இருந்து வந்த இந்திய பிட்ச்கள் தற்போது முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமாக இருந்து வருகிறது. இதனால், இந்திய பவுளர்கள் பெரிதளவில் பாதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் கருத்து பரவும் நிலையில், இந்தியாவில் கிரிக்கெட் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமான ஒரு விளையாட்டாக மாறி வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஆட்டத்தை சுவாரசியமாக்க BCCI எடுத்த தவறான முடிவு

நவீன காலத்திற்கு ஏற்ப கிரிக்கெட்டையும் வேகமாக மாற்றும் முயற்சியில் BCCI இறங்கியுள்ளது. அதன் காரணமாகவே இந்தியாவில் உள்ள கிரிக்கெட் பிட்ச்கள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு மாற்றப்படுவதால் போட்டியில் அதிக சிக்ஸ்ரகள் மற்றும் பவுண்டரிகள் அடிக்கப்பட்டு போட்டி சுவாரஸ்யமாக மாறும் என BCCI கணக்குப்போட்டுள்ளது. ஆனால், அது தற்போது இந்திய கிரிக்கெட்டின் மொத்த போக்கையுமே மாற்றியுள்ளது என்று சொல்லலாம். ஒரு காலத்தில் ஸ்பின்னர்களுக்கும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் பேர் போன இந்திய அணி தற்போது பந்துவீச்சில் சொதப்பி வருவதற்கு முக்கிய காரணம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக BCCI அமைக்கும்  இந்த பிட்ச்கள் தான்.

ஐபிஎல் மோகத்தால் வந்த சோகம்

ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு என்றே சொல்லலாம். 20 ஓவர் போட்டியாக நடத்தப்படும் ஐபிஎல் தொடரில் அதிக பௌண்டரிகள், சிக்ஸர்களை பேட்ஸ்மேன்கள் விளாசவும், ஆட்டத்தை உற்சாகமாக வைத்துக்கொள்ளவும் இதுபோன்ற பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச்களை முதன் முதலில் BCCI அமைக்கத் தொடங்கியது. ஆரம்பக் கால கட்டத்தில் போட்டிகள் பார்ப்பதற்கு உற்சாகமாக தோன்றினாலும் நாளடைவில் இது போட்டியின் சுவாரஸ்யத்தையே குறைத்து விட்டது என்று ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், ஐபிஎல் போட்டிகளை தாண்டி சர்வதேச போட்டிகளிலும் இதுபோன்ற பிட்ச்கள் அமைக்கப்படுவதால் இந்திய அணிக்கு மிகுந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நடத்தப்படும் போட்டிகளில் பந்துவீச்சாளர்களை பதம் பார்க்கும் இந்திய பேட்ஸ்மேன்கள் மற்ற நாடுகளில் நடக்கும் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் நிகழ்வுகளையும் நாம் சமீப காலங்களில் பார்க்க முடிகிறது.

IND VS WI போட்டிக்கு பின் கொதித்தெழுந்த கம்பீர்

சமீபத்தில் கவுகாத்தியில் நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேன 2-வது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் 400 ரன்களை சுலபமாக கடந்தது பெரும் பேசுபொருளாகியது. அதிலும் 5 பேட்ஸ்மேன்கள் அந்த போட்டியில் சதம் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், போட்டிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியதாவது, பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையே ஒரு சமமான போட்டி இருக்க வேண்டும். ஆனால் இங்கு நடைபெற்றது ஒரு கிரிக்கெட் போட்டியே கிடையாது, இது முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு மட்டுமே சாதகமாக இருந்தது. நவீன கிரிக்கெட்டில் 2 புதிய பந்துகள், வட்டத்திற்குள் 5 ஃபீல்டர்கள், அதிரடி பேட்டிங் என எல்லாமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில், பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லாத ஆடுகளங்களை அமைப்பது நியாயமே இல்லை. போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கு சிறிதளவாவது சாதகமான அம்சங்கள் இருக்க வேண்டும். இதுக்கு பெயர் கிரிக்கெட்டே கிடையாது” இவ்வாறு அவர் பேசினார்.

விமர்சனத்திற்கு ஆளாகும் இந்திய பேட்ஸ்மேன்கள்

முன்பெல்லாம் இந்திய பேட்ஸ்மேன்கள் என்றாலே ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்கள் என்ற பேச்சு இருந்தது. ஆனால், தற்போது அமைக்கப்படும் தார் சாலை போன்ற பிட்ச்களில் விளையாடி அனுபவம் பெற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் வெளி நாடுகளில் உள்ள ஸ்விங் மற்றும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்களில் விளையாட முடியாமல் திணறுகின்றனர். குறிப்பாக அபிஷேக் சர்மா போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சென்று விளையாடும் போது ஸ்வீங் மற்றும் பவுன்சர் பந்துகளை சமாளிக்க முடியாமல் திணறுவதையும் எடுத்துக்காட்டாக பார்க்கலாம். இதற்கெல்லாம் காரணம் இங்கு அமைக்கப்படும் தார் சாலை போன்ற பிட்ச்கள் தான் என்ற பரவலான விமர்சனமும் எழுந்துள்ளது. மேலும், இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீரே இந்திய ஆடுகளங்களை விமர்சித்திருப்பது இந்த கூற்றை உண்மையாக்கியுள்ளது என்றே கூறலாம்.

விமர்சனங்களை சமாளிக்க என்ன செய்ய போகிறது BCCI?

ஏற்கனவே சமீப காலங்களில் பல்வேறு டெஸ்ட் போட்டிகளை இந்தியா இழந்து வருவதற்கு தார் சாலை பிட்ச்களின் ஆதிக்கமே காரணம் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே இதே நிலை தொடர்ந்தால் அடுத்தாண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2028ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை தொடர்களில் இந்தியாவின் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. எனவே, இதுபோன்ற விமர்சனங்களை கடந்து வர BCCI-யும், இந்திய அணியும் என்ன மாறியான முயற்சிகளை முன்னெடுக்கப் போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks