ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?

ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
News Image

தமிழ்நாட்டில் தற்போது நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியது.

அதிமுக பரிதாபம்:

இந்த இடைத்தேர்தலின் முடிவுகள் ஆளுங்கட்சியான தவெக-விற்கு சாதகமாக அமைந்துள்ளது. தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழர் - இந்திய கம்யூனிஸ்ட் என 5 முனைப்போட்டி நிலவி வந்த நிலையில், தாராபுரத்தில் மட்டுமே தொடக்க சுற்றுகளில் தவெக தடுமாறியது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் ஏற்றம் பெற்று தொகுதியைக் கைப்பற்றியது.

இந்த இடைத்தேர்லின் முடிவுகளில் மீண்டும் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது அதிமுக-வே ஆகும். கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக வசம் இருந்த இந்த இரு தொகுதிகளும் தற்போது தவெக வசமாகிவிட்டது.

சரிந்த வாக்கு சதவீதம்:

கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக மதுராந்தகத்தில் 34.95 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் 25.61 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது. தாராபுரம் தொகுதியில் தொடக்கத்தில் முன்னிலை பெற்று வந்த போதிலும் அதிமுக இந்த இடைத்தேர்தலில் 25.08 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 40.56 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. அதாவது, தாராபுரத்தில் மட்டும் 15 சதவீதம் வாக்குகளையும், மதுராந்தகத்தில் 10 சதவீதம் வாக்குகளையும் அதிமுக கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் இழந்துள்ளது.

சரியாத திமுக வாக்குகள்:

திமுக-வைப் பொறுத்தமட்டில் கடந்த தேர்தலிலும், இந்த இடைத்தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்தாலும் அவர்களின் வாக்கு சதவீதம் எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை. கடந்த பொதுத்தேர்தலில் மதுராந்தகத்தில் 30.18 சதவீதம் வாக்குகள் பெற்ற நிலையில், இந்த இடைத்தேர்தலில் 29.15 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது.

தாராபுரத்தில் திமுக கடந்த தேர்தலில் 32.2 சதவீதம் வாக்குகள் பெற்ற நிலையில், இந்த இடைத்தேர்தலில் 31.78 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. இரு தொகுதியிலும் சுமார் 1 சதவீதம் வாக்குகள் மட்டுமே திமுக இழந்துள்ளது. நாம் தமிழரின் வாக்குகளும் இரு தொகுதியிலும் சரிந்துள்ளது.

எகிறிய தவெக வாக்குகள்:

ஆனால், கடந்த முறை இந்த இரு தொகுதிகளையும் பறிகொடுத்த தவெக இந்த முறை தனது வாக்கு வங்கியை நன்றாக உயர்த்தியுள்ளது. மதுராந்தகத்தில் தவெக கடந்த முறை 31.32 சதவீதம் வாக்குகள் பெற்ற நிலையில், இந்த முறை சுமார் 8 சதவீதம் வாக்குகள் அதிகரித்து 39.96 சதவீதம் பெற்றுள்ளது.

தவெக தாராபுரம் தொகுதியில் கடந்த முறை வெறும் 23.23 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், இந்த இடைத்தேர்தலில் 14 சதவீதம் வாக்குகள் பெற்று அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

என்ன செய்வார் இபிஎஸ்?

எடப்பாடி பழனிசாமி அதிமுக-விற்கு தலைமைப் பொறுப்பேற்ற பிறகு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் நிலையில், இந்த இடைத்தேர்தலிலும் அது தொடர்ந்துள்ளது. தொடர்ந்து தோல்வி முகம் மட்டுமே எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கண்டு வரும் நிலையில், எஞ்சியுள்ள 5 தொகுதிகளில் அதிமுக என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks