செஞ்சி அருகே கொடூரம்! பெற்ற 6 வயது மகனையே கிணற்றில் வீசிய தந்தை - 3 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்பு!

செஞ்சி அருகே கொடூரம்! பெற்ற 6 வயது மகனையே கிணற்றில் வீசிய தந்தை - 3 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்பு!
News Image

விழுப்புரம்: செஞ்சி அருகே குடும்பத் தகராறு காரணமாக பெற்ற 6 வயது மகனை தந்தையே விவசாயக் கிணற்றில் தூக்கி வீசியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி சிறுவனை சடலமாக மீட்டனர். இதையடுத்து சிறுவனின் தந்தையை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத் தகராறில் விபரீத முடிவு!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நல்லான்பிள்ளைபெற்றால் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவரது மனைவி தேவி (35). இந்தத் தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு கடைசியாக 6 வயதில் சஞ்சய் என்ற ஆண் குழந்தை இருந்தான்.

செல்வராஜ் மற்றும் தேவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு கடன் வாங்கிய பணத்தைச் செலவு செய்தது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்தத் தகராறு இன்று காலையிலும் தொடர்ந்து நீடித்துள்ளது.

மகனைத் தூக்கிச் சென்று கிணற்றில் வீசியதாகப் புகார்!

இதில் கணவன், மனைவிக்கு இடையேயான தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செல்வராஜ் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் தனது 6 வயது மகன் சஞ்சயைத் தூக்கிக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

பின்னர் நல்லான்பிள்ளைபெற்றால் அரசு மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் சிறுவன் சஞ்சயைத் தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மீட்புப் பணி!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதுடன், சிறுவனை மீட்பதற்காக கீழ்பெண்ணாத்தூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், விவசாயக் கிணற்றில் இறங்கி சிறுவனைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். கிணற்றில் தண்ணீர் இருந்ததால் சிறுவனைத் தேடி மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு சிறுவன் சஞ்சய் சடலமாக மீட்கப்பட்டான்.

தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை!

இதனைத் தொடர்ந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனின் தந்தை செல்வராஜைக் கைது செய்து சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் குடும்பத் தகராறு, சம்பவத்திற்கான காரணம் மற்றும் சிறுவனை கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நான்கு பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த ஒரே ஆண் குழந்தையான 6 வயது சிறுவனை, குடும்பத் தகராறில் தந்தையே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்சினை காரணமாக பிஞ்சுக் குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks