வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!

வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
News Image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காதல் விவகாரத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை, தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த வி.பரங்கனி கிராமம் கே.எஸ்.ஆர். நகரைச் சேர்ந்தவர் சிவசாஸ்திரி, டிப்பர் லாரி ஓட்டுநர். இந்த தம்பதிக்கு 16 மற்றும் 14 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் தனது தாயுடன் ராணிப்பேட்டையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெற்றோருக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, சிறுமியைக் கண்டித்துள்ளனர். மேலும், ராணிப்பேட்டையில் இருந்து அவரை அழைத்து வந்து வி.பரங்கனி கிராமத்தில் குடும்பத்துடன் தங்க வைத்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக வானூர் அருகே கரசானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இருப்பினும், தனது காதலனுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த பெற்றோர் பலமுறை கண்டித்தும், சிறுமி தொடர்ந்து அவருடன் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு சிறுமியின் தாய் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேலூருக்குச் சென்றுள்ளார். இதனால் சிறுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது காதல் விவகாரத்தில் ஏற்பட்ட ஆத்திரத்தில் இருந்த அவரது தந்தை, தூங்கிக் கொண்டிருந்த மகளின் கழுத்தை நெரித்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, தனது சகோதரருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட அவர், மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்தனர்.

அங்கு மயக்க நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு, வானூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே, மகளைக் கொலை செய்துவிட்டு வீட்டிலேயே இருந்த தந்தையை வானூர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் உயிரிழப்புக்கான முழுமையான காரணங்கள், சம்பவத்தின் பின்னணி மற்றும் கொலை நடைபெற்ற சூழல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காதல் விவகாரத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியைப் பெற்ற தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் வானூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks