ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்

ரூ.1.18 கோடி முதலீட்டு மோசடி !! பெண்களுடன் உல்லாசமாக இருந்த சினிமா ஸ்டைல் மசாலா நாயகன்
News Image

" அதிக லாபம் என ஆசை வார்த்தை "

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் வேலவன் ( வயது 48 ) இவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கடந்தாண்டு ஜூன் மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது ;

நான் பணியாற்றிய நிறுவனத்தின் வாயிலாக , அம்பத்தூரைச் சேர்ந்த உப்பிலி சீனிவாசன் ( வயது 34 ) என்பவரது அறிமுகம் கிடைத்தது. இவரது மாமனார் கேட்டரிங் செய்து வருவதாகவும் , அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.

அதை நம்பி , 80 லட்சம் ரூபாய் வரை அவரது வங்கி கணக்கிற்கும் , ரொக்கமாகவும் கடந்த 2020 முதல் 2025 - ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் கொடுத்தேன். மேலும் எனது மகள் ஜனனி மற்றும் நண்பர்கள் கண்ணன் , பிரபாகர், செல்வராஜ் மதன் ஆகியோரிடம் இருந்தும், மொத்தமாக, 1.18 கோடி ரூபாய் வரை பெற்றார். பின், பணத்தை திரும்பி தராமல் ஏமாற்றி தலைமறைவானார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

"பெண்களுடன் உல்லாசம்"

இது குறித்து மத்திய குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து , பெங்களூருவில் பதுங்கி இருந்த உப்பிலி சீனிவாசனை பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், உப்பிலி சீனிவாசன் மோசடியில் ஈடுபட்டதும், அந்த பணத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரிந்தது. மேலும், அவர்களுக்கு நகைகள் , பட்டுப் புடவைகள் , பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks