IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!

IND vs WI: மீண்டும் சேஸிங் முடிவை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்..! அனல் பறக்க ஆடும் அபிஷேக் - இஷன்!
News Image

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரில் ஆடி முடித்துள்ள நிலையில், தற்போது டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 250 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது.

சேசிங்கை தேர்வு செய்த வெ. இண்டீஸ்:

இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது டி20 போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது. முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கடந்த போட்டியில் இமாலய இலக்கை சேஸ் செய்ததால் கிடைத்த தன்னம்பிக்கையால் இந்த முடிவை வெஸ்ட் இண்டீஸ் எடுத்துள்ளது.

சாம்சன் காலி:

இந்திய அணியின் பந்துவீச்சு கடந்த போட்டியில் சொதப்பலாக இருந்ததால் இமாலய இலக்கை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் களமிறங்கியுள்ளனர். அபிஷேக் சர்மா - சாம்சன் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். கேப்டன் ஸ்ரேயாஸ் தலைமையில் இஷான், திலக் வர்மா, நமன் தீர், அக்ஷர் படேல், ப்ரின்ஸ் யாதவ் ஆகியோரே களமிறங்கியுள்ளனர்.

கடந்த போட்டியில் பெரியளவில் சோபிக்காத ஷிவம் துபே, குல்தீப் யாதவ் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக நிதிஷ் ரெட்டி மற்றும் ப்ரின்ஸ் யாதவ் களமிறங்கியுள்ளனர். இந்திய அணிக்காக கடந்த போட்டியில் அசத்திய சாம்சன் 3 ரன்களில் இந்த போட்டியில் அவுட்டானார்.  சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 18 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

அணி விவரம்:

கடந்த போட்டியில் கலக்கிய அதே அணியில் 9 வீரர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஷெப்பர்ட்டிற்கு பதிலாக சாம்சன் என்ற வீரரும், அகில் ஹொசைனுக்கு பதிலாக கீமோ பாலும் களமிறங்கியுள்ளனர்.

இந்திய அணி:

அபிஷேக் சர்மா, சாம்சன், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, நிதிஷ் ரெட்டி, நமன் தீர், அக்ஷர் படேல், மயங்க் யாதவ், அர்ஷ்தீப் சிங், ப்ரின்ஸ் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கேப்டன் ஷாய் ஹோப், கமீல் பூரான், ஹெட்மயர், ரோவ்மென் பவல், ரூதர்ஃபோர்ட், சாம்ப்சன், கீமோ பால், சேஸ், ஸ்ப்ரிங்கர், ஷமர் ஜோசப், மோதி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

வெற்றியைத் தீர்மானிக்கும் பந்துவீச்சு:

இரு அணியைப் பொறுத்தமட்டிலும் பந்துவீச்சு என்பது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகவே உள்ளது. இதனால், எந்த அணி சிறப்பாக பந்துவீசுகிறதோ? அந்த அணியே இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பை பிரகாசம் ஆக்கிக் கொள்ளும்.

இந்திய அணியில் இளம் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்புகளை பிசிசிஐ கொடுத்தாலும் அவர்கள் தொடர்ந்து ஜொலிக்கத் தவறி வருகின்றனர். இந்த மைதானம் மிகவும் சிறிய மைதானம் என்பதால் வீரர்கள் ரன் மழை பொழிவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks