மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 10 நாட்களில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் 4600க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

தமிழ்நாடு அரசின் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையுள்ள (22 காரட்) தங்க மோதிரம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் செப்டம்பர் 28ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார் திட்டத்திற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதலமைச்சர் துவங்கி வைத்ததிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மாநில முழுவதும் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் நிலையில். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அடுத்து மாநிலத்தின் இரண்டாவது பெரிய மருத்துவமனையாக உள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மட்டும் கடந்த 10 நாளில் இந்த திட்டத்தின் மூலம் 4600 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் மோதிரங்கள் வழங்கப்பட்டது.

தவெக மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கோபிசன் வருகை தந்து 30க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து வழங்கினார்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் கோபிசன் பேசும்போது...," தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்து துவங்கி வைத்தது இந்த பகுதி சட்டமன்ற உறுப்பினராக மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தனது தங்கைகளின் குழந்தைகளுக்கு முதலமைச்சர் இந்த திட்டத்தை வழங்கியுள்ளார். இந்தத் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களான எங்களையும் முதலமைச்சர் தாய் மாமன் ஸ்தானத்திற்கு உயர்த்தி சென்றுள்ளார். இந்த மோதிரங்களை குழந்தைகளுக்கு அணிவித்து விடும்போது நாங்களே அவர்களின் தாய் மாமன்களாக உணர்கிறோம் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த முதல்வருக்கு நன்றி என்றார்.

Source: Read Full Article