ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றனர். இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரிசி, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கி பயனடைகின்றனர்.

அரசின் திட்டங்கள் பெற ரேஷன் கார்டு முக்கியம்

அதுமட்டுமல்ல அரசின் எந்தவொரு திட்டங்களாக இருந்தாலும் சரி ரேஷன் கார்டுகள் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டம், பொங்கல் பரிசு தொகுப்பு போன்றவைகள் ரேஷன் அட்டைகள் இருந்தால் மட்டுமே வாங்க முடியும்.இந்நிலையில் ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்ட குறைபாடுகளை சரி செய்ய முடியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதனால் பொதுமக்கள் தங்கம் குமுறல்களை வெளிப்படுத்தினர். இதனையடுத்து தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தும் "பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம்" நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் அட்டையில் உடனடியாக திருத்தம் செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடைபெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: VS Babu Health Update: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு? அமைச்சர் அருண்ராஜ் முக்கிய அப்டேட்!

ரேஷன் கார்டு திருத்தம்

அதாவது பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் 2 வது சனிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2026 அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் சனிக்கிழமை 10.10.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

புகார் தெரிவிக்கலாம்

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம். கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் 19 மண்டலங்களில்

சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article