Zelensky Speaks to Trump: தீவிரமாகும் ரஷ்யா-உக்ரைன் போர்; ட்ரம்ப்புக்கு ஃபோனை போட்ட ஜெலன்ஸ்கி; விவாதித்தது என்ன.?

Zelensky Speaks to Trump: தீவிரமாகும் ரஷ்யா-உக்ரைன் போர்; ட்ரம்ப்புக்கு ஃபோனை போட்ட ஜெலன்ஸ்கி; விவாதித்தது என்ன.?
News Image

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதலுக்கு மத்தியில், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் பேசினார். அது குறித்து கூறிய ஜெலன்ஸ்கி, "நாங்கள் பல விஷயங்களை பற்றி விவாதித்தோம். நியூயார்க்கில் சந்திக்க ஒப்புக்கொண்டோம். இந்த சந்திப்பு பல மாற்றங்களை கொண்டுவரக்கூடும். தூதரக மட்டத்தில் முன்னேற்றத்திற்கான உத்வேகம் தொடர்கிறது," என்று தெரிவித்தார்.

“அமைதியை நோக்கி முன்னேறுவதே எங்களின் முதன்மையான முன்னுரிமை“

அமெரிக்க தூதுக்குழுவின் சமீபத்திய கீவ் பயணத்தைக் குறிப்பிட்டு பேசுகையில், ஜெலன்ஸ்கி அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு நன்றி தெரிவித்தார். "ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரின் கீவ் பயணத்திற்காக அதிபருக்கு நான் நன்றி கூறுகிறேன். நாங்கள் முக்கியமான விஷயங்களைப் பற்றி விரிவாக விவாதித்தோம். மேலும், அவர் உக்ரைனில் உள்ள நிலைமையை நேரடியாகக் கண்டார். அமைதியை நோக்கி முன்னேறுவதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும்," என்று ஜெலன்ஸ்கி கூறினார்.

மேலும், "பதற்றங்களை குறைப்பதற்கும், எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் மனித உயிர் பாதுகாப்பு போன்ற அடிப்படை பாதுகாப்புப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கும் எங்களிடம் பல பரிந்துரைகள் உள்ளன. நாங்கள் அமெரிக்கக் குழுவுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். மேலும், கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம்," என்று அவர் கூறினார்.

கிரஹாம் மசோதா - ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்த ஜெலன்ஸ்கி

அதோடு, லிண்ட்சே கிரஹாம் மசோதாவில் கையெழுத்திட்டு அதை சட்டமாக்கியதற்காக ட்ரம்பிற்கும் அவர் நன்றி கூறினார். அவர், "நான் அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறேன். நாம் அனைவரும் இதில் உடன்படுகிறோம் – அமைதி நிலவ வேண்டும். உக்ரைனுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி! உதவிய அனைவருக்கும் நன்றி!" என்று ஜெலன்ஸ்கி கூறினார்.

செப்டம்பர் 18 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான தனது பிடியை இறுக்கும் வகையில், 'ரஷ்யா மீதான தடைகள் சட்டம் 2026'-ல் கையெழுத்திட்டார். ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்கும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் தற்போது 100% சுங்க வரிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. ஏனெனில், இவ்விரு நாடுகளும் ரஷ்யாவிலிருந்து பெருமளவு எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks