CSK New Head Coach: சிங்கம் களமிறங்கிடுச்சே.. CSK புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா? கங்குலியின் செல்லப்பிள்ளை!

CSK New Head Coach: சிங்கம் களமிறங்கிடுச்சே.. CSK புதிய பயிற்சியாளர் யார் தெரியுமா? கங்குலியின் செல்லப்பிள்ளை!
News Image

ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் தவிர்க்கவே முடியாத அணியாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி, ரெய்னா, அஸ்வின், மைக் ஹஸ்ஸி போன்ற ஜாம்பவான் வீரர்கள் பலரும் ஆடிய அணி சிஎஸ்கே. ஐபிஎல் தொடரிலே அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சிஎஸ்கே வைத்துள்ளது.

சிஎஸ்கே புதிய பயிற்சியாளர்:

ருதுராஜ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் மிகுந்த சரிவைச் சந்தித்து வருகிறது. அணியின் தொடர்ந்து மோசமான செயல்பாடுகளைத் தொடர்ந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஸ்டீபன் ஃப்ளமிங் ராஜினாமா செய்தார். சிஎஸ்கே 5 முறை கேப்டனாக கோப்பை வென்றபோதும் அவரே பயிற்சியாளராக பொறுப்பு வகித்தார்.

சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், அந்த அணியின் புதிய பயிற்சியாளராக  ஜாகிர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அணிக்காக ஒரு ஐபிஎல் போட்டியில் கூட விளையாடாத ஜாகிர்கானை பயிற்சியாளராக சிஎஸ்கே நியமித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. ஜாகிர்கான் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றதில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பரிந்துரையே காரணம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

யார் இந்த ஜாகிர்கான்?

47 வயதான ஜாகிர்கான்  இந்திய அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளராக உலா வந்தவர். இந்திய அணிக்காக 2000ம் ஆண்டு அறிமுகமாகிய ஜாகிர்கான் 2014ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடியுள்ளார். 92 டெஸ்ட் பாேட்டிகளில் ஆடி 311 விக்கெட்டுகளும், 200 ஒருநாள் போட்டிகளில் ஆடி 282 விக்கெட்டுகளும், 17 டி20 போட்டிகளில் ஆடி 17 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

இந்திய அணி 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணம் ஜாகிர்கான் ஆவார். மேலும், 2003ம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குச் சென்றதற்கும் ஜாகிர்கான் முக்கிய காரணம் ஆவார்.

ஐபிஎல் போட்டிகளில் ஜாகிர்கான் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார். இதுமட்டுமின்றி இந்திய அளவில் இந்தியா ஏ அணிக்காகவும் ஆடியுள்ளார். சர்வதேச அளவில் ஆசியா லெவன் அணிக்காகவும் ஆடியுள்ளார். பெங்கால் டைகர், ஜயுஏ புல்ஸ், இந்தியா லெஜண்ட்ஸ் ஆகிய அணிக்காக ஆடியுள்ளார்.

சென்னை அணியின் பயிற்சியாளராக இதுவரை பேட்ஸ்மேன் ப்ளமிங்கே தலைமைப் பயிற்சியாளராக இருந்து வந்த நிலையில், பந்துவீச்சாளரான ஜாகிர்கான் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியின் சமீபகால சரிவிற்கு பந்துவீச்சின் பலவீனமே காரணம் என்று கூறப்படுகிறது. இதனை சரி செய்யும் விதமாக ஜாகிர்கான் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜாகிர்கான் கங்குலி கேப்டனாக இருந்தபோது இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்டவர். பின்னர், கங்குலியின் தலைமையிலான இ்ந்திய அணியில் யுவராஜ், சேவாக், ஹர்பஜன், கைஃப், நெஹ்ரா, அகர்கர் ஆகியோருடன் இணைந்து அணியை வலுப்படுத்தினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks