ஆசிய கண்டத்தில் உள்ள பெண்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்காக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு முதல் மகளிர் கிரிக்கெட் போட்டிகளும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அரையிறுதி மோதல்:

சமீபத்தில் ஆசிய கோப்பையை வென்ற உத்வேகத்துடன் இந்த தொடரில் இந்திய மகளிர் அணி பங்கேற்றது. ஜப்பானில் நடந்து வரும் இந்த தொடரில் தோல்வியே இல்லாமல் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி இன்று வங்கதேசம் அணிக்கு எதிராக ஆடியது.

இந்த போட்டியில் தொடக்கத்தில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா அதிரடியாக தொடக்கம் தந்தனர். ஷபாலி பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி மிரட்டலாக ஆடிக்கொண்டிருந்தார். மறுமனையில் சிறப்பாக ஆடிய ஸ்மிரிதி 19 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

முதல் சதம்:

கமாலினி 3 ரன்னில் அவுட்டாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஷபாலியுடன் ஜோடி சேர்ந்தார். அபாரமாக ஆடி ஷபாலி வர்மா அரைசதம் கடக்க ஹர்மன்ப்ரீத் கவுர் நிதானமாகவும், ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விளாசி ஆடினார். ஹர்மன்ப்ரீத் கவுர் 40 ரன்களுக்கு அவுட்டாக மறுமுனையில் ஷபாலி தன்னுடைய அதிரடியைத் தொடர்ந்தார்.

அபாரமாக ஆடி அரைதசம் கடந்த ஷபாலி பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி சதம் விளாசினார். அவர் 49 பந்துகளில் 3 பவுண்டரி 9 சிக்ஸருடன் சதம் விளாசினார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் ஷபாலி வர்மா பெற்றார். இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 195 ரன்களை குவித்தது.

196 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணிக்கு இந்திய வீராங்கனைகள் குடைச்சல் தந்தனர். நந்தினி ஷர்மா, ஸ்ரீசரணி, கிரந்தி கவுட், தீப்தி ஷர்மா பந்துவீச்சு தாக்குதல் நடத்த வங்கதேச வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதிப்போட்டி:

பெர்டோஸ், ஷோபனா, கேப்டன் சுல்தானா, சொர்ணா அக்தர் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாக தொடக்க வீராங்கனை திலாரா அக்தர் மட்டும் கவுரவமான ஸ்கோரை எட்ட போராடினார். இதனால், வங்கதேசம் போராடி 50 ரன்களை கடந்தது. இறுதியில் 15.4 ஓவர்களில் வங்கேதசம் 81 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திலாரா அக்தர் மட்டும் 23 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். இந்திய அணி 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா தங்கப்பதக்கத்திற்காக இந்தியா - இலங்கை அணிகள் நாளை மறுநாள் மோதுகின்றனர். இந்திய அணி இதுவரை மகளிர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கடந்த முறை தங்கப்பதக்கம் வென்றிருந்தது. தற்போது மீண்டும் தங்கப்பதக்கம் வென்று அதை தக்க வைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. அதேசமயம், அதே நாளில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் மோதியது.

Source: Read Full Article