சிவகங்கை மாவட்டம் கல்லூரி பயிலும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், வருகின்ற 22.09.2026 முதல் 08.10.2026 வரை, மாவட்டத்தின் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் (BDO Offices) சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெறவுள்ளது.

சிறப்பு கல்விக்கடன் முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் ஒருங்கிணைக்கப்படும் இம்முகாம், மாவட்டத்தின் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் (BDO Offices) 22.09.2026 முதல் 08.10.2026 வரை நடைபெற உள்ளது.

முகாம் விவரங்கள்:

வ. எண், ஒன்றியத்தின் பெயர் (Block Name), தேதி, கிழமைகள், இடம் (Venue), நேரம்

1. சாக்கோட்டை & கல்லல் 22.09.26 அன்று - செவ்வாய்க்கிழமை - பூமாலை வணிக வளாகம், புதிய பேருந்து நிலையம் அருகில், காரைக்குடி முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை.

2. திருப்புவனம் 23.09.26 புதன்கிழமை திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO Office) முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை.

3. சிங்கம்புணரி & எஸ்.புதூர் 24.09.26 வியாழக்கிழமை சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO Office)

முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை

4. தேவகோட்டை & கண்ணங்குடி 25.09.26 வெள்ளிக்கிழமை தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO Office)

முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை

5. திருப்பத்தூர் 28.09.26 திங்கள்கிழமை திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO Office) முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை

6.இளையான்குடி 01.10.26 வியாழக்கிழமை இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO Office) முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை

7.மானாமதுரை 06.10.26 செவ்வாய்க்கிழமை மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO Office)

முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை

8.சிவகங்கை & காளையார்கோவில் 08.10.26 வியாழக்கிழமை மாவட்ட வளர்ச்சி மன்ற அரங்கம் (DDC Hall), மாவட்ட ஆட்சியரகம்

முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 04:00 மணி வரை.

ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

நடப்பு நிதியாண்டில் சுமார் 5,000 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதற்காக ரூ.59 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். எனவே, இக்கல்வி கடன் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், கல்லூரி சேர்க்கை ஆணை, கலந்தாய்வு ஒதுக்கீட்டு ஆணை, கல்லூரியின் உண்மைத்தன்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) மற்றும் கட்டண விவரப் பட்டியல், ஆதார் அட்டை மற்றும் PAN அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.

மேலும், பெற்றோர், இணைக் கடனாளரின் ஆவணங்களாக ஆதார் அட்டை மற்றும் PAN அட்டை, வருமானச் சான்றிதழ் அல்லது சம்பளச் சீட்டு, படிவம்-16 (சம்பளம் பெறுபவர்களுக்கு) , கடந்த 6 மாதங்களுக்கான வங்கிக் கணக்கு அறிக்கை, சமீபத்திய மின்சாரக் கட்டண ரசீது அல்லது குடும்ப அட்டை (முகவரிச் சான்றாக) ,பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் , சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் அனைத்து வங்கிகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டு, கல்விக்கடன் தொடர்பான தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்க உள்ளனர். கல்விக்கடன் முகாம்களை நடத்த விரும்பும் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை (Lead Bank Office, Indian Overseas Bank, Sivagangai) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article