தாராபுரம் இடைத்தேர்தல்:

கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத நிலையில், அதிக இடங்களை (107) கைப்பற்றிய தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்தது. இதையடுத்து, மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியான தொகுதிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளிக்கு வருகிற அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, ஆளுங்கட்சியான தவெக, எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் தங்களது வேட்பாளர்களை முன்னிறுத்தியுள்ளதால் இந்த 2 தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவுகிறது.

முதலமைச்சர் விஜய் பரப்புரை:

இந்நிலையில், தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் எதிர்க்கட்சியான திமுகவை விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, “தேர்தலில் தோல்வியடைந்தையும், மக்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள் என்பதையும் மறந்துவிட்டு இன்றளவும் முதலமைச்சர் தான் தான் எனக் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். மேலும், எங்கள் குடும்பத்திற்கு தான் அதிகாரம் உண்டு, எங்களுக்கு கீழ் தான் மக்கள் உள்ளனர் என்ற சிலரின் மன்னாராட்சி மனப்பான்மை எனக்கு கிடையாது.

தீய சக்தி திமுகவின் பினாமிபோல் சுய நலமாக சுற்றுபவர்கள் நாம் கிடையாது. நாங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு எம்மதமும் சம்மதம் என்று சொல்லாமல் எம்மதமும் நம் மதம் என்று சொல்லிவிட்டு தான் வந்தோம். யாருடைய மதத்திற்கும் நாங்கள் எதிரிகள் அல்ல என்று சொல்லிக்கொள்கிறோம். தவெகவை சேர்ந்த எளிய வேட்பாளர்கள் திமுக மன்னர்களையும், குறுநில மன்னர்களையும் தோற்கடித்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவோம். மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்துள்ளோம்.”

"தன்னை தோற்கடித்த கொளத்தூர் மக்களை கையெடுத்துக் கும்பிட்டு கோடான கோடி நன்றிகளை சொல்லும் மு.க.ஸ்டாலின் இனி வரும் ஒவ்வொரு தேர்தல்களிலும் அதனை சொல்ல வேண்டும். நான் பாசமாக பேசுகிறேன் ஆனால், மு.க.ஸ்டாலின் அவன், இவன் என ஒருமையில் பேசுகிறார். திமுகவின் பரம்பரை சொத்தான ஆபாச வார்த்தைகளை கொண்டு விமர்சிக்கிறார்கள். தங்களோடு கூட்டணி வைத்துள்ள ஏஜென்சிகளை கொண்டும் ஆபாசநதியை ஓடசெய்கின்றனர். ஆனால் அவர்கள் தரம் தாழ்த்தி பேச பேச தவெக உயர்ந்துக் கொண்டே போகும்” என முதலமைச்சர் விஜய் பேசினார்.

Source: Read Full Article