உசிலம்பட்டி அருகே ஜல்லி கற்கள் மட்டுமே அமைத்து 4 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி - சாலையில் சென்று வர முடியாமல் கிராம மக்கள் அவதியுற்று வரும் அவல நிலை நீடித்து வருகிறது.

2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சாலை குண்டும் குழி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்மமுத்தன்பட்டி - இரங்கசாமிபட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு செல்ல இரங்கசாமிபட்டி விலக்கிலிருந்து அம்மமுத்தன்பட்டி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால் சாலை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் தார் சாலை அமைக்க உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் மூலம் 98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கப்பட்டு ஜல்லி கற்களும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் ஜல்லி கற்கள் மட்டுமே அமைக்கப்பட்ட இந்த சாலையை தார் சாலையாக அமைக்கப்படாமல் கடந்த 4 மாதங்களாக கிடப்பில் போட்டதால் கிராமத்தில் உள்ள மாணவ மாணவிகள் மற்றும் அன்றாட பணிகளுக்கு செல்வோர் பெரும் அவதி அடைந்து வரும் அவல நிலை நீடித்து வருகிறது.

ஒப்பந்ததாரர்கள் முறையான சாலை அமைக்காமல் தாமதப்படுத்தி வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும், ஒப்பந்ததாரர்கள் முறையான சாலை அமைக்காமல் தாமதப்படுத்தி வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து ஜல்லி கற்கள் மட்டுமே அமைக்கப்பட்டு 4 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை விரைந்து தார் சாலையாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Read Full Article