US Army Sec. Resigns: ட்ரம்ப்புக்கு ஷாக்.! ஈரான் போருக்கு நடுவே அமெரிக்க ராணுவச் செயலாளர் ராஜினாமா.! பின்னடைவா.?

US Army Sec. Resigns: ட்ரம்ப்புக்கு ஷாக்.! ஈரான் போருக்கு நடுவே அமெரிக்க ராணுவச் செயலாளர் ராஜினாமா.! பின்னடைவா.?
News Image

ஈரானுடன் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், அமெரிக்காவிற்கு ஏற்பட்ட ஒரு பெரும் பின்னடைவாக, அந்நாட்டின் ராணுவச் செயலாளர் டிரெய்ன் டிரிஸ்கால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அவர் ராஜினாமா செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவலை வெள்ளை மாளிகை திங்களன்று உறுதிப்படுத்தியது.

டிரிஸ்கால் ராஜினாமாவை மறுக்காத வெள்ளை மாளிகை

டிரிஸ்கால் ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை குறித்துக் கேட்டபோது, ​​வெள்ளை மாளிகையின் முதன்மைத் துணைப் பத்திரிகைச் செயலாளர் அன்னா கெல்லி அதை மறுக்கவில்லை. "அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்க வேண்டும் என்ற அதிபர் ட்ரம்பின் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில், டிரிஸ்கால் ராணுவத் துறைக்குள் மிகவும் செல்வாக்கு மிக்கப் பங்கை ஆற்றியுள்ளார்," என்று அவர் கூறினார்.

அதோடு, "வரலாற்றுச் சிறப்புமிக்க ராணுவ நடவடிக்கைகளின் போது, அவர் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினார். தயார்நிலை மற்றும் தாக்குதல் திறனை மீண்டும் வலியுறுத்தினார், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்தார், மேலும் பலவற்றையும் செய்தார்." என்றும் அன்னா கெல்லி தெரிவித்தார்.

தொடர்ந்து பதவி விலகும் அமெரிக்க ராணுவ உயரதிகாரிகள்

ஏப்ரல் மாதம் திடீரென பதவி விலகிய கடற்படைச் செயலாளர் ஜான் பீலன் உட்பட, சமீபத்தில் பதவி விலகிய பல முக்கிய ராணுவத் தலைவர்களில் டிரிஸ்கோலும் ஒருவர். பதவி விலகிய மற்ற முக்கிய பிரமுகர்களில் ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ், ராணுவ ஜெனரல் டேவிட் ஹோட்னே மற்றும் மேஜர் ஜெனரல் வில்லியம் கிரீன் ஆகியோர் அடங்குவர். பென்டகனில் சேர்ந்ததிலிருந்து, ஹெக்ஸெத், கடற்படை நடவடிக்கைகளின் தலைவர் மற்றும் விமானப்படையின் துணைத் தலைமைத் தளபதி உட்பட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகளை மாற்றியுள்ளார்.

டிரிஸ்கால் யார்.?

டிரிஸ்கால் இதற்கு முன்பு ராணுவத்தில் பணியாற்றி, 2007-ல் அதிகாரியானார். பின்னர், அவர் ஒரு குதிரைப்படைப் பிரிவுக்கு தலைமை தாங்கி, 2009-ல் பல மாதங்கள் ஈராக்கிற்கு பணியமர்த்தப்பட்டார். ராணுவச் செயலாளராக இருந்தபோது, ​​போர்க்களத்தில் புதிய தொழில்நுட்பங்களை அவர் ஏற்றுக்கொண்டதன் காரணமாக, டிரிஸ்கால் 'ட்ரம்பின் ட்ரோன் நிபுணர்' என்று அறியப்பட்டார்.

கடந்த ஆண்டு, ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks