IND vs AFG: மீண்டும் வந்த சாம்சன்.. ஆப்கானிஸ்தான் கூட ஆடப்போற இந்தியா டீம் இவங்கதான்! 2 தமிழர்களுக்கு சான்ஸ்!

IND vs AFG: மீண்டும் வந்த சாம்சன்.. ஆப்கானிஸ்தான் கூட ஆடப்போற இந்தியா டீம் இவங்கதான்! 2 தமிழர்களுக்கு சான்ஸ்!
News Image

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளது. இந்திய அணி அடுத்தாண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் ஆட இருந்தாலும் டி20 போட்டிகளில் இந்திய அணி அதிகளவு ஆடி வருகிறது.

இந்திய அணி விவரம்:

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 போட்டியில் ஆடும் இந்திய அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. ஸ்ரேயாஸ் ஐயர் ( கேப்டன்)
2. அபிஷேக் சர்மா
3. வைபவ் சூர்யவன்ஷி
4. சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்)
5. இஷன் கிஷண் ( விக்கெட் கீப்பர்)
6. திலக் வர்மா ( விக்கெட் கீப்பர்)
7. ஷிவம் துபே
8. நிதிஷ் ரெட்டி
9. அக்ஷர் படேல்
10. வாஷிங்டன் சுந்தர்
11. வருண் சக்கரவர்த்தி
12. ரவி பிஷ்னோய்
13.பும்ரா
14.அர்ஷ்தீப்சிங்
15. ஹர்ஷித் ராணா

சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு:

India’s squad for Afghanistan T20I series announced. #TeamIndia will play three T20Is against Afghanistan at New Delhi, beginning September 13.#AFGvIND pic.twitter.com/UqTUeZyHz8
— BCCI (@BCCI) September 1, 2026

இந்த தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த உலகக்கோப்பைக்கு இந்திய அணியை வழிநடத்தும் பொருட்டு அவர் கேப்டனாக தொடர்ந்து செயல்படுகிறார். அவரது தலைமையில் அயர்லாந்து, இங்கிலாந்து தொடரை இழந்தாலும் இந்தியா ஜிம்பாப்வே தொடரை கைப்பற்றி கம்பேக் அளித்தது.

இந்த தொடரில் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவர் அணியில் இடம்பிடிப்பாரா? என்பது கேள்விக்குறியே ஆகும். சூர்யவன்ஷிக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கும் பொருட்டு அபிஷேக் சர்மா - சூர்யவன்ஷியே அணியில் தொடர்வார்கள் என்று கருதப்படுகிறது.

உடற்தகுதி சவால்:

3வது இடத்திலும் இஷன் கிஷண் ஆடுவதால் சாம்சனது வாய்ப்பு மிகவும் கடினம் ஆகும். இந்த தொடரில் அணியில் இடம்பிடித்துள்ள நிதிஷ்ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், பும்ரா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் உடற்தகுதியைப் பொறுத்தே அணியில் இடம்பிடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்ரவுண்டர்களாக ஷிவம் துபே, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகவும் மாறியுள்ளது. அர்ஷ்தீப்சிங் மட்டுமே அணியில் இடம்பிடிப்பது தற்போது வரை உறுதியாகியுள்ள நிலையில், முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் ராணா இருவரும் முழு உடற்தகுதி அடையாததால் வேறு பந்துவீச்சாளர்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவர் இந்த தொடரில் இந்திய அணிக்காக ஆட உள்ளனர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் வரும் 13ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. மொத்தம் 3 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி நிறைவடைகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks