TVK MLA Kanimozhi: தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவிற்கு உடல்நலனின் என்ன பிரச்னை என்பது குறித்தும் தவெக எம்.எல்.ஏ., கனிமொழி சந்தோஷ் பதிலளித்துள்ளார்.

சர்ச்சையான முதலமைச்சரின் லண்டன் பயணம்:

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் அண்மையில் லண்டன் சென்று இருந்தார். ஆனால், அவருடன் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அல்லது துறைசார் செயலாளர்கள் என யாரும் பயணிக்கவில்லை. இதனால், அவருக்கு என்ன ஆனது? துறைசார் அமைச்சர் இல்லாமலேயே முதலமைச்சர் எப்படி தொழில் முதலீட்டு பயணத்தை மேற்கொள்ளலாம் என எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பினர். இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. ”கீர்த்தனாவிற்கு உடல்நிலை சரியில்லாத்தால் அவர் முதலமைச்சருடன் பயணிக்கவில்லை” என விளக்கமளித்தார். உடனே தொழில்துறை அமைச்சருக்கு என்ன ஆனது, மாதவிடாய் காரணமாக தான் அவர் பயணிக்கவில்லையா? என பல்வேறு விமர்சனங்களும், கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.

அமைச்சர் கீர்த்தனாவிற்கு என்ன ஆச்சு?

இந்நிலையில் கீர்த்தனாவின் உடல் நிலை தொடர்பாக, கவுண்டம்பாளையம் தவெக எம்.எல்.ஏ., கனிமொழி சம்பத் சமூகவலைதளத்தில் விரிவான பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு பெண்ணாக, இதை நான் என் கண்ணாலேயே பார்த்ததால் சொல்ல விரும்புகிறேன். என் தங்கை அமைச்சர் கீர்த்தனாவை, அவரது கழுத்தெலும்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு காமாட்சி மருத்துவமனையில் சந்தித்தேன். மருத்துவர்கள் சுமார் 20 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியிருந்தனர், ஆனால் மாநிலத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பின் காரணமாக 4 நாட்களுக்குள்ளாகவே அவர் பணிக்குத் திரும்பிவிட்டார். அவர் மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபோதே, முதலமைச்சரின் லண்டன் பயணத்தை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார்.

”பணிகளை ஒருங்கிணைத்த அமைச்சர் கீர்த்தனா”

ஒவ்வொரு நாளும் அவரது முதல் கேள்வி, அவரது வலியைப் பற்றியோ அல்லது மாத்திரைகளைப் பற்றியோ இருக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு ஏற்பாடும் சரியான நேரத்தில் நடந்ததா என்பதுதான். நான் அவரிடம் ஓய்வெடுக்கச் சொன்னேன், ஆனால் அவர் கேட்கவே இல்லை. மேலும், என்னை மிகவும் பாதித்தது இதுதான். அமைச்சர் ஆதவ், கீர்த்தனா சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்று சொன்னபோது, எதிர்க்கட்சி வட்டாரம் அதற்கான காரணம், அவர் குணமடைவது, அல்லது அவர் உண்மையில் என்ன அனுபவித்திருக்கலாம் என்று கேட்க ஒரு கணம் கூடத் தயங்கவில்லை. அவர்களின் மனம் நேராக ஒரே ஒரு காரணத்திற்குச் சென்றது. அது மாதவிடாய்.

இதையும் படியுங்கள்: TN DGP: TN Govt: அக்.1 முதல் GPS கட்டாயம்..! கடத்தலை தடுக்க அதிரடி திட்டம் - குவாரிகள் தொடர்பாக அரசு புதிய முடிவு

”மாதவிடாய்க்குள் அடைக்காதீர்கள்”

ஒரு பெண்ணின் பிரச்னைக்கு ஒரே ஒரு அர்த்தம்தான் இருக்க முடியும் என்ற எண்ணம், அவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையை வெளிக்காட்டுகிறது. பெண்கள் அவர்களின் மாதவிடாய் சுழற்சிகளால் வரையறுக்கப்படுவதில்லை. நாங்கள் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், தாய்மார்கள், மகள்கள். ஒரே நேரத்தில் நோய், காயம் மற்றும் கடமை என அனைத்தையும் சுமந்துகொண்டு, தொடர்ந்து எங்கள் பணிகளைச் செய்கிறோம். ஒரு பெண்ணின் ஒவ்வொரு விவரிக்க முடியாத நாளையும் அவளது உயிரியல் செயல்பாடுகளுக்குள் சுருக்குவது, அவளது வேலையில் எந்தக் குறையும் இல்லாதபோது, அவளது உடலைத் தாக்கும் ஒரு பழைய பழக்கமாகும்.

மன்னிப்பு கோரிய கனிமொழி

நான்கு நாட்களுக்குப் பிறகு, இன்னும் குணமடைந்து கொண்டும், வலி நிவாரணிகளை உட்கொண்டும், கட்டுப் போட்டபடியும், கீர்த்தனா தொடர்ந்து நிறுவனங்களைச் சந்திப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். இந்தப் பிற்போக்குத்தனமான மனப்பான்மை நிறுத்தப்பட வேண்டும். கடினமான சூழ்நிலைகளிலும் தொடர்ந்து தலைமை தாங்கும் பெண்களை நாம் கொண்டாட வேண்டும், அவர்களின் மாதவிடாய் பிரச்னைகளை பற்றி விவாதிக்கக் கூடாது. பெண்கள் இதைவிடச் சிறந்ததற்குத் தகுதியானவர்கள். தமிழ்நாடு இதைவிடச் சிறந்ததற்குத் தகுதியானது. தகவலை வெளியிட்டதற்காக அமைச்சர் கீர்த்தனா என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் இதைத் தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்பினீர்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனாலும் நான் இதை வெளியிட்டே ஆக வேண்டியிருந்தது” என கனிமொழி சம்பத் விளக்கமளித்துள்ளார்.

Source: Read Full Article