சாப்பிட்ட தட்டைத் தானே கழுவி வைத்த தவெக அமைச்சர் - காலை உணவு திட்ட நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி!

சாப்பிட்ட தட்டைத் தானே கழுவி வைத்த தவெக அமைச்சர் - காலை உணவு திட்ட நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி!
News Image

சேலம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காமராஜர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த தவெக அமைச்சர்கள் மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். ஆட்சியர் மற்றும் அமைச்சருடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட மகிழ்ச்சியில் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான திட்டம் இன்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த திட்டத்தின் விரிவாக்கத்தை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு உணவு பரிமாறிய அமைச்சர் அவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார். தொடர்ந்து, உணவின் சுவை எப்படி இருக்கிறது. தினம்தோறும் உங்களுக்கு இது போன்ற தரமான உணவு தான் வழங்கப்படும். ஏதாவது குறைகள் இருந்தால் உடனடியாக ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சருடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட மகிழ்ச்சியில் மாணவர்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதேபோல்,  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் காலை உணவு திட்டத்தை  சிறுகுறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் மதன்ராஜா தொடங்கி வைத்தார். இன்று காலை முதல்வர் விஜய் மாணவர்களுக்கு காமராஜர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் மதன் ராஜா மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரைபொங்கல், வெண்பொங்கல் உள்ளிட்ட உணவுகளை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதன் ராஜா கூறுகையில், ”முதல்வர் தொடங்கி வைத்த காமராஜர் காலை உணவு திட்டம் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் மாணவ - மாணவியர்கள் பெரிதும் பயன்பெறுவர்” என்று கூறினார்.

​திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காமராஜர் காலை உணவு திட்டத்தை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டாக்டர் வி.கே ராஜீவ் தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் மாணவர்களுக்கு உணவை வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது, தான் சாப்பிட்ட தட்டை அவரே கழுவி வைத்தது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ​தொடர்ந்து, திருவாடானை தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், சேதமடைந்த தரைத்தளங்களை உடனடியாகச் சரிசெய்யவும், புதிதாகக் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறைக் கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர், திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks