TVK vs DMK: "காசுக்கு வர்ற கூட்டத்துக்கும், அன்பால வர்ற கூட்டத்துக்கும் வித்தியாசம் தெரியலயா?" திமுக-வுக்கு தவெக கேள்வி

TVK vs DMK: "காசுக்கு வர்ற கூட்டத்துக்கும், அன்பால வர்ற கூட்டத்துக்கும் வித்தியாசம் தெரியலயா?" திமுக-வுக்கு தவெக கேள்வி
News Image

முதலமைச்சர் விஜய் முதலீட்டாளர்களைச் சந்திப்பதற்காக வெளிநாடு லண்டன் சென்றுள்ளார். லண்டன் சென்றுள்ள அவரைச் சந்திப்பதற்காக லண்டனில் வாழும் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் குவிந்தனர். மருத்துவமனை வாசலில் நின்று கொண்டு ரசிகர்கள் தவெக என்று கத்தியதால் மருத்துவமனையில் இருந்தவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த நிலையில், தவெக ஐடி விங் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

வேறுபாடு தெரியுமா?

லண்டனில் கூட்டம் கூடியது என்று கதறும் கொத்தடிமைக் கூட்டத்திற்கு, காசு கொடுத்து கூடும் கூட்டத்திற்கும் அன்பால் கூடும் கூட்டத்திற்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?

முதலமைச்சரை காண மக்கள் அன்பால் திரண்டிருந்தார்கள். எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட அதிகமான மக்கள் கூடிவிட்டதால், நிகழ்ச்சியையே ரத்து செய்து மக்களைத் திரும்பிச் செல்லுமாறு லண்டன் காவல்துறை அறிவுறுத்தியது. அதுதான் மக்கள் நலன்காக்கும் காவல்துறை.  கடந்த தீயசக்தியின் ஆட்சியில் காவல்துறையை எப்படி ஏவல்துறையாக நடத்தினார்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

லண்டனில் கூட்டம் கூடியது என்று கதறும் கொத்தடிமைக் கூட்டத்திற்கு, காசு கொடுத்து கூடும் கூட்டத்திற்கும் அன்பால் கூடும் கூட்டத்திற்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?

மாண்புமிகு முதலமைச்சரை காண மக்கள் அன்பால் திரண்டிருந்தார்கள். எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட அதிகமான மக்கள் கூடிவிட்டதால்,…
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 16, 2026

ஏமாற்று நாடகம்:

முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி, மக்கள் வரிப்பணத்தில் தன் குடும்பத்துடன் மட்டும் செல்லாமல், மகன் குடும்பம், மகள் குடும்பம் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு சொகுசுப் பயணம் மேற்கொண்டு, தனியார் அரங்கத்தை முன்பதிவு செய்து, ‘பெரியார் சிலை திறப்பு’ என்ற பெயரில் படப்பிடிப்பு நடத்தி, தமிழக மக்களை ஏமாற்றும் நாடகத்தை அரங்கேற்றவில்லை.

ரூபாய் 15,300 கோடி முதலீடு:

மாறாக, தமிழகத்திற்கு ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன.

ரூ.15,000 கோடி முதலீடு செய்ய தனியார் நிறுவனம் ஒன்று ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியிட்டு, பின்னர் அந்த நிறுவனமே மறுப்பு தெரிவித்ததால் உலக அரங்கில் தமிழ்நாட்டின் மாண்பைக் குலைத்த கதைக்குச் சொந்தக்காரர்களே கொத்தடிமைக் கூட்டம் தான்!

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் விஜய் ஏராளமான தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து வருகிறார். மேலும், அவர் நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமாரை நேரில் சந்தித்து அவர் பங்கேற்ற கார் பந்தயத்தையும் தொடங்கி வைத்தார். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருவரையும் ஒரே இடத்தில் சந்திப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks