திமுக ஆட்சிகால அடுத்தடுத்து ரத்து

தமிழகத்தில் சட்டமன்திட்டங்கள்ற தேர்தல் முடிவில் புதிய திருப்பமாக கடந்த 50 ஆண்டு காலமாக மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அந்த வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றது. இதனையடுத்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பல திட்டங்களை அறிவித்தாலும் கடந்த ஆட்சி காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் எந்த எந்த திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.

பரந்தூர் பசுமை விமான நிலையம்

தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக சென்னையில் பிரம்மாண்ட விமான நிலையம் தேவை என்ற நிலையில், பந்தூரில் சுமார் 5,746 ஏக்கர் பரப்பவில் ரூ.27,000 கோடி செலவில் இரண்டாவது விமான நிலையத் திட்டமிடப்பட்டது. இதற்கான நிலங்கள் கையப்படுத்தும் பணியானது 50% எட்டிய நிலையில், மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் தவெக அரசு அந்த திட்டத்தை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விஜய் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவித்தார்.

பரந்தூருக்கான மெட்ரோ ரயில் ரத்து

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் பட்சத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தையும் செயல்படுத்த திமுக அரசு திட்டமிட்டது. இதற்கான ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டதால் மெட்ரோ ரயில் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது. பூந்தமல்லியிலிருந்து பரந்தூர் விமான நிலையத் தளம் வரை 20 ரயில் நிலையங்கள் கொண்டசுமார் 53 கி.மீ. தூரம் செல்லும் வகையில் சென்னை மெட்ரோ திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ECR மேம்பால வழித்தடம் (திருவான்மியூர்-உத்தண்டி)

பரபரப்பான கடற்கரைப் பகுதியில் நிலவும் தொடர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், ஈசிஆர் உயர்மட்ட வழித்தடம் (திருவான்மியூர்–உத்தண்டி) சென்னையின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திட்டமிடப்பட்ட 13.5 கி.மீ நீளமுள்ள நான்கு வழி உயர்மட்ட சுங்கச் சாலையாகும் . இது தமிழ்நாட்டின் மிக நீளமான உயர்மட்டச் சாலைத் திட்டமாக உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை தவெக அரசு கைவிட்டுள்ளது. அதே நேரம் 200 கி.மீ நீளமுள்ள சென்னை-புதுச்சேரி உயர்மட்ட கடற்கரை வழித்தடத்தை தவெக அரசு அறிவித்துள்ளது.

கிண்டி-வேளச்சேரி மேம்பாலம்

கிண்டிக்கும் வேளச்சேரிக்கும் இடையேயான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட சுமார் ரூ.310 கோடி மதிப்பிலான மேம்பாலத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு, 2026 பிப்ரவரியில் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஆனால் தவெக அரசு இந்த திட்டத்தை நிறுத்தி டெண்டரை ரத்து செய்துள்ளது. இதற்கு காரணமாக டெண்டர் சிக்கல் மற்றும் நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டியுள்ளது.

முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள், திட்டங்களை ரத்து செய்வதையே ஒரு திட்டமாக செய்து வருகிறார்!!! pic.twitter.com/pUdXxeRoo3

— BJP Tamilnadu (@BJP4TamilNadu) September 2, 2026

காஞ்சிபுரம் புதிய நகர மேம்பாட்டுத் திட்டம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் நகரமான காஞ்சிபுரத்தை சுற்றி 62.78 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஒரு புதிய நகரத்தையும், 18 கிராமங்களையும், இணைத்து புதிய நகர மேம்பாட்டுத் திட்டத்திற்கு கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தவெக அரசு ரத்து செய்துள்ளது.

செம்மஞ்சேரியில் பல்நோக்கு விளையாட்டு வளாகம் ரத்து

ஜெப்பியார் கல்வி அறக்கட்டளை ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தை 20 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, முந்தைய திமுக அரசு 2021-ல் மீட்டெடுத்தது. இந்த நிலத்தில் சுமார் ரூ.261 கோடி மதிப்பில் செம்மஞ்சேரியில் பல்நோக்கு விளையாட்டு வளாகம் அமைக்க திமுக ஆட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த திட்டமிடப்பட்டு அப்போது முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ஆனால் இந்த திட்டத்தை கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தவெக அரசு ரத்து செய்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் அளவிலான போட்டிகள் உட்பட, பெரிய அளவிலான தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளுக்காக நடைபெறும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

கோவையில் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்

கோவையில் ரூ. 300 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையம், திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏறக்குறைய தயாராகிவிட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் பெரியார் நூலகம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால் தவெக அரோச வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படவில்லை என தெரிவித்த நிலையில், விரைவில் அந்த மையம் திறக்கப்படும் என கூறியுள்ளது.

ஓசூர் அறிவு வழித்தடம்

உலகளாவிய திறன் மையங்களை ஈர்ப்பதற்கான ஒரு அறிவு வழித்தடமாக அறிவிக்கப்பட்ட ஓசூர் அறிவு வழித்தடத் திட்டம், ஓசூர் பிராந்தியத்தில் உள்ள வெளிவட்டச் சாலை, சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு (STRR), பாகலூர் புறவழிச்சாலை மற்றும் முக்கிய புறவழிச் சாலைகள் நெடுகிலும் சுமார் 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

TIDCO நிறுவனம் செப்டம்பர் 2025-ல் ஒரு டெண்டரை வெளியிட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு இதுவரை பெரிய அளவிலான கட்டுமானம் அல்லது நில ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த திட்டம் அடுத்தக்கட்டத்திற்கு செல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு இணையாக கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முந்தைய திமுக அரசு அறிவித்தது. 25,000 இருக்கைகள் கொண்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக 2025 அக்டோபரில் டெண்டர்கள் கோரப்பட்டன, ஆனால், அடுத்தக்கட்ட பணிகள் மெதுவாகவே நடைபெற்று வருகின்றன.எனவே இந்த திட்டம் நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

Source: Read Full Article