டாஸ்மாக் துறையில் மாற்றம் வரும் வரை அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக்கில் கூடுதல் வசூல்

தமிழக அரசுக்கு வருவாய் அள்ளித்தரும் மூலதனங்களில் டாஸ்மாக் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடி வசூலை அள்ளும் டாஸ்மாக் துறை மீது ஏகப்பட்ட முறைகேடு புகார்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த திமுக ஆட்சியில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக அடிப்படை விலையை விட அதிகமாக வாங்குவது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. தவெக ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக்கில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது நிறுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததும் கட்சி நிதி என்ற பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டியது. அதாவது டாஸ்மாக்கில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக வசூல் செய்யும் ரூ.10 கட்சி நிதி என்ற பெயரில் செல்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தடுக்க டாஸ்மாக் ஊழியர்கள் அமைப்புடன் அமைச்சர் விக்னேஷின் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இதில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதாக சொல்லப்பட்டது.

அதேசமயம் டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, வாகன போக்குவரத்துச் செலவு என பல பிரச்னைகள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை

அதுமட்டுமல்லாமல் MRP விலையை விட கூடுதலாக ரூ.1 அதிகமாக வாங்கினது தெரிய வந்தால் முதல்முறை கண்டறியப்பட்டால் 3 மாதங்கள் சஸ்பெண்ட், அதே தவறை இரண்டாவது முறை செய்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதையும் மீறி பல இடங்களில் பாட்டிலுக்கு ரூ.10, ரூ.20 கூடுதல் வசூல் செய்வது தொடர்கதையாகி வருகிறது. தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

அதேசமயம் சட்டப்பேரவையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, வார விடுமுறை, மாதாந்திர விடுமுறை, பண்டிகை கால முன்பணம் உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது, போலி மதுபான விற்பனை அல்லது பிற முறைகேடுகள் தொடர்பாக புகாரளிக்க 1800-889-2015, 7397720230 என்ற எண்களில் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஒரே நாளில் 67 பேர் சஸ்பெண்ட்

இப்படியான நிலையில் டாஸ்மாக்கில் கூடுதலாக பணம் வசூலித்தது தொடர்பான புகாரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 67 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்ட புகார் அடிப்படையில் இனி தவறு யார் செய்தாலும் சமரசமில்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்திருந்தார். இன்று மீண்டும் வெளியிட்டுள்ள பதிவில், மாற்றம் வரும் வரை மாற்றப்படுவது தொடரும். எ‌ந்த அழுத்தத்திற்கும் பணியமாட்டேன் எந்தந்த அழுத்தத்திற்கும்... என்றும் தளபதியின் பாதையில்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article