TN Temples: கோயில்களில் செல்போன் தடை.. இவர்களுக்கு மட்டும் அனுமதி.. அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

TN Temples: கோயில்களில் செல்போன் தடை.. இவர்களுக்கு மட்டும் அனுமதி.. அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!
News Image

தமிழ்நாடு கோயில்களில் யாருக்கெல்லாம் செல்போன் தடை விதிமுறை பொருந்தாது என்பது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.

கோயில்களில் செல்போன்களுக்கு கட்டுப்பாடு

தமிழ்நாடு முழுக்க செயல்படும் கோயில்களில் முதற்கட்டமாக 52 பெரிய கோயில்களின் வளாகங்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு ரூ.5 கட்டணம் செலுத்தி கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போனை ஒப்படைத்து விட்டு பின் சாமி தரிசனம் செய்த பிறகு பெற்றிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்த அறிவிப்பானது நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

பேரன்பிற்குரிய பொதுமக்கள் அனைவருக்கும் வணக்கம்!

இன்று (01-09-2026) முதல், ஏற்கனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனை தரிசனம் செய்வதற்காகவும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத்…
— TVK Ramesh (@RameshOffcl) September 1, 2026

பக்தர்கள் மன நிம்மதிக்காக சாமி தரிசனம் செய்ய வரும் இடத்தில் செல்போனைக் கொண்டு போட்டோ, செல்ஃபி, ரீல்ஸ் வீடியோ, கருவறை புகைப்படம், அர்ச்சகர் மற்றும் கோயில் ஊழியர்கள் பற்றிய புகார்களில் உண்மை நிலவரம் தெரிய வரும்முன் தவறான தகவல்கள் பரவுவது என பல பிரச்னைகள் எழுந்து வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு நீதிமன்ற உத்தரவின்படி இந்த திட்டமானது அமலுக்கு வந்துள்ளது.

யாருக்கெல்லாம் விதிவிலக்கு?

இந்த நிலையில் கோயில்களின் செல்போன் தடை தொடர்பாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதாவது நீதிமன்ற உத்தரவுப்படியே இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆந்திரா, கேரளம், தெலங்கானா மற்றும் வடமாநிலங்களில் உள்ள கோயில்களில் கூட செல்போன்களை பாதுகாத்து கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது.  அதனால் அப்படியான நடைமுறை ஒன்றும் புதியது அல்ல.  செல்போனுக்கு தடை விதிக்கும் திட்டத்தை பாஜகவினர் கண்மூடித்தனமாக எதிர்க்கக்கூடாது. விசேஷ நாட்களின்போது செல்போன்களுக்கு தடை விதிக்கப்படாது என ஏற்கனவே கூறியுள்ளோம்.  கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் செல்போன் கொண்டு செல்ல தடை இல்லை என விளக்கமளித்துள்ளார். அதேசமயம் கேமரா வசதி இல்லாத சாதாரண செல்போன்களை பக்தர்கள் கையோடு கொண்டு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைக்கு ரூ.5 வசூலிப்பது கோயிலுக்கு வருமானம், தனிநபர் அந்த பணத்தைக் கொண்டு செல்வதற்கு இல்லை. அப்படியெல்லாம் இல்லை. அந்த பணியில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்களைத் தான் ஈடுபட வைத்துள்ளோம். அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், ரசீது அச்சடிக்க பேப்பர் ரோல் வாங்கவும் இந்த மாதிரி செலவினங்கள் தான் செய்யப்போகிறோம். அதிலும் மீதம் இருந்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான அன்னதானம் திட்டத்தில் செலவிடுவோம் எனவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks