TN Rain: மிரட்டும் மழைக்காலம்.. நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

TN Rain: மிரட்டும் மழைக்காலம்.. நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
News Image

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையைக் காட்டிலும் வடமேற்கு பருவமழைக் காலத்தில்தான் தமிழ்நாட்டில் அதிகளவு மழை பெய்வது வழக்கம். மழைக்காலம் என்றாலே சுகாதார சவாலையும் மக்கள் அதிகளவு எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பின்பற்ற வேண்டியது என்னென்ன?

மழைக்காலங்களில் குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என பலரும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மழைக்காலத்தில் நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டியது என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. மழைக்காலங்களில் அவ்வப்போது வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது நல்லது ஆகும்.

2. மழைக்காலங்களைப் பொறுத்தமட்டில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த காலகட்டத்தில் நோய்த் தொற்று மிக எளிதாக பரவும்.

3. வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு நன்றாக கை, கால்களை கழுவுவது நல்லது.

4. மழைக்காலமாக இருந்தாலும் துணிகளை வழக்கம்போல துவைத்தே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, உள்ளாடைகளை நன்றாக துவைத்துப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

5. மழைக்காலம் என்பதால் உடலில் செரிமானம் மந்தமாகவே இருக்கும். இதனால், காரமான மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது ஆகும்.

6. மழைக்காலங்களில் முடிந்த வரை உணவுகளைச் சூடாக சாப்பிடுவது நல்லது ஆகும்.

7. மழைக்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைப்பது என்பது சவாலாகும். குறிப்பாக, குழந்தைகளுக்கு எளிதில் உடல்நலம் குன்றும் அபாயம் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின்கள், தாது உப்பு, கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை சரிசமவிகித அளவில் அளிக்க வேண்டும்.

8. மழைக்காலங்களில் மூலிகைகள் பானங்களை அருந்துவது ஆரோக்கியம் ஆகும்.

9. மழைக்காலங்களில் மக்கள் அதிகளவு எதிர்கொள்ளும் சவால் கொசுத் தொல்லையே ஆகும். இதனால், வீட்டைச் சுற்றியும், வீடுகளிலும் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உடைந்த பாத்திரங்கள், தேங்காய் மட்டைகள், டயர்கள் ஆகியவை இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

10. மழைக்காலங்களில் பாம்பு போன்ற உயிரினங்கள் மிதமான வெப்பத்திற்காக வீடுகள், காலணிகள் மற்றும் வாகனங்களில் தஞ்சம் புகும் அபாயம் உள்ளது. இதனால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

11. எப்போதும் கையில் கைக்குட்டை வைத்திருப்பது அவசியம் ஆகும். தும்மல், இருமல் வந்தால் அந்த கைக்குட்டையை கொண்டு மூடி தும்மவோ, இருமலோ செய்ய வேண்டும்.

12. மழைக்காலங்களில் சளி, இருமலைத் தடுக்கும் வகையில் பனங்கற்கண்டு, தூதுவளை, தேன் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது நல்லது ஆகும்.

13. வீடுகளில் கொசுகள் உள்ளே வருவதைத் தவிர்க்கும் வகையில் மாலை நேரங்களில் வீடுகளில் ஜன்னல்களை மூடி வைப்பது சிறப்பாகும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks