Free Train Travel : நவம்பர் 1 முதல்.. ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.! யாருக்கெல்லாம்.? ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

Free Train Travel : நவம்பர் 1 முதல்.. ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.! யாருக்கெல்லாம்.? ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
News Image

ரயில் பயணத்தை விரும்பும் மக்கள்

நீண்ட தூரம் செல்வதற்கு மக்கள் விரும்பி பயணிப்பது ரயில் பயணத்தை மட்டுமே, அந்த வகையில் குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளும் இருப்பதால் பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாக ரயில் பயணம் உள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் தினமும் பல ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்களில் பலவித சலுகைகளும் வழங்கப்பட்டு வந்தது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான 50% டிக்கெட் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த சலுகை கொரோனா பாதிப்பு காலத்தின் மோது நிறுத்தப்பட்டது. அதே நேரம்  முதியவர்களுக்கு ரயில்களில் கீழ் பெர்த் (Lower Berth) ஒதுக்கீட்டு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

ரயிலில் இலவச பயணம்- யாருக்கெல்லாம்.?

மேலும் கண் பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு இரண்டாம் வகுப்பு, ஸ்லீப்பர் மற்றும் ஏசி வகுப்புகளில் குறிப்பிட்ட சதவிகிதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் ஏசி பெட்டி உட்பட அனைத்து ரயில்களிலும் இலவசமாக பயணம் செய்யும் நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில்,  வீரதீரச்செயல் விருது பெற்றவர்களுக்கு, நவம்பர் 1 முதல் இரயில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே சில உயரிய வீரதீர விருதுகள் பெற்றவர்களுக்கு இலவச ரயில் பயண சலுகை கிடைத்த நிலையில், தற்போது மேலும் சில குறிப்பிட்ட வீரதீர விருது பெற்றவர்களும் இந்த வசதிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் இலவச பயணம்

வீரதீரச்செயல்களுக்காக வழங்கப்படும் சேனா பதக்கம், நௌ சேனா பதக்கம் மற்றும் வாயு சேனா பதக்கம் ஆகியவற்றைப் பெற்றவர்களுக்கு மத்திய அரசு வாழ்நாள் முழுவதும் இலவசப் பயண வசதியை அறிமுகப்படுத்துகிறது. இந்த சிறப்பு சலுகையின் மூலம் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஏசி மற்றும் ஏசி சேர் கார் ஆகியவற்றில் பயணம் செய்யலாம், இந்த இலவச பயணம் வீரதீரச்செயல்களுக்காக வழங்கப்படும் சேனா பதக்கம், நௌ சேனா பதக்கம் மற்றும் வாயு சேனா விருது பெற்றவர்களுக்கு மட்டும் அல்லாமல், அவர்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் வீரதீர விருது பெற்றவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்,

வீரதீர விருதுகளை வென்றவர்களுக்கு சலுகை

நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களின் குடும்பங்களை அங்கீகரிக்கும் வகையில், மரணத்திற்குப் பின் குறிப்பிட்ட வீரதீர விருதுகளைப் பெற்ற திருமணமாகாத வீரர்களின் பெற்றோர்களுக்கும் இலவச பயணமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்தப் புதிய வசதியானது, சேனா பதக்கம், நௌ சேனா பதக்கம், மற்றும் வாயு சேனா பதக்கம் ஆகியவற்றைப் பெற்றவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இது, பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற அனைத்துப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் வழங்கப்படும் ஒரு பொதுவான இலவசப் பயண வசதி இல்லை எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் தகுதியுள்ள பயனாளிகள் இந்த வசதியைப் எளிதாக பெறும் வகையில், பாதுகாப்பு அமைச்சகம் ஒரு டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. தகுதியுள்ள பயனாளிகள் ரயில்வே சலுகை இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என்றாலும், இந்த வசதியைப் பயன்படுத்தி பயணச்சீட்டு முன்பதிவு செய்வது நவம்பர் 1, 2026 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks