TN Govt: அக்.1 முதல் GPS கட்டாயம்..! கடத்தலை தடுக்க அதிரடி திட்டம் - குவாரிகள் தொடர்பாக அரசு புதிய முடிவு

TN Govt: அக்.1 முதல் GPS கட்டாயம்..! கடத்தலை தடுக்க அதிரடி திட்டம் - குவாரிகள் தொடர்பாக அரசு புதிய முடிவு
News Image

TN Govt On Mines: அரசின் வருவாய் பெருக்கும் வகையில் புதிய குவாரிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

கனிமவள கடத்தலை தடுக்க நடவடிக்கை

தமிழ்நாட்டிலிருந்து சட்ட விரோதமாக எம் சாண்ட், ஜல்லி, குண்டுக்கல் போன்ற கனிமங்களை கடத்திச் செல்வதை தடுக்கும் வகையில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் கனரக வாகனங்களுக்கே ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் வருவாயை பெருக்கும் வகையில் புதிய குவாரிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும், செயல்படாத குவாரிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் தலைமையில் ஆய்வு:

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் அறிவுரையின்படி புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் பல்வேறு பணிகள் மற்றும் மாவட்ட அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து இயற்கை வளங்கள் துறை அலமச்சர் டாக்டர் டி.கே.பிரபு ஆய்வு மேற்கொண்டார். இதில் கனிமங்களின் உற்பத்தி, அரசுக்கு கிடைக்கப்பெறும் வருவாய் மற்றும் அவற்றினை அதிகரிப்பதற்கான சாத்தியகூறுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சட்ட விரோத குவாரிகளை தடுப்பதற்கும் மற்றும் அனுமதியின்றி கணிமங்களை எடுத்துச்செல்வதை தடுக்கவும். அனைத்து கனிமங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களிலும் 30.09.2026-க்குள் ஜிபிஎஸ் கருவி கட்டாயமாக பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

புதிய குவாரிகளுக்கு திட்டம்:

தொடர்ந்து நிலுவையிலுள்ள குத்தகை கோரும் விண்ணப்பங்கள்மீது தரிதமாக நடவடிக்கை எடுக்குமாறும், புதிய பகுதிகளை கண்டறிந்து மின்னணு முறையில் ஏலத்திற்கு கொண்டு வந்து புதிய குவாரிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் மற்றும் செயல்பாட்டில் இல்லாத குவாரிகளை நடைமுறைக்கு கொண்டுவரவும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் துரித நடவடிக்கை மேற்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கினை முழுமையாக எய்திடுமாறு மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டடுள்ளது.

”அரசு வருவாயை பெருக்க வேண்டும்”

இறுதியாக, முதலமைச்சரின் வெற்றித் தமிழகத்தினை உருவாக்கும் இலக்குகளான ஊழலற்ற வெளிப்படை தன்மையான நிர்வாகம், பொதுமக்களின் தேவைகளை தங்குதடையின்றி நிவர்த்தி செய்தல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்து சிறப்பான ஆட்சியை நடத்துவதற்கு ஏதுவாக அரசின் நலத்திட்டங்களை திறன்பட செயல்படுத்தும் பொருட்டு,  அரசுக்கு வருவாயினை அதிகரிக்க நிர்ணக்கப்பட்ட கனிம உற்பத்தி இலக்கினை முழுமையாக எய்திட துறையின் அலுவலர்கள் தங்களது கடமையினை உணர்ந்து பொறுப்புடன் பணிகளை மேற்கொண்டு சிறப்பாக செயல்படுமாறு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்: TN Chief Secretary: புதிய தலைமை செயலாளர்..! சொந்த பெயரை கொண்ட IAS அதிகாரியை டிக் அடிக்கும் CM விஜய்? சாய்குமார்?

இதையடுத்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் தலைமையில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர சாலை பணிகளுக்கு மண் எடுக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கும் ஒப்பந்ததாரர்களுடன்  கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில், திட்டப்பணிகளுக்கு குத்தகை அனுமதி பெறுவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து கேட்டறிந்து அவற்றை களைவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இவ்வாய்வுக்கூட்டத்தில், மாநில எல்லைகளின் சோதனைச்சாவடிகளை கண்காணிக்க சிறப்புக்குழுக்களில் பணியாற்றிய அலுவயர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks